லைஃப்ஸ்டைல்
நீரிழிவு பரிசோதனை

‘நீரிழிவு நோய்’-அன்றும் இன்றும்

Published On 2019-12-01 04:48 GMT   |   Update On 2019-12-01 04:48 GMT
உலக மக்கள் தொகையில் சுமார் 100-க்கு 20 பேருக்கு சர்க்கரை வியாதி எனப்படும் நீரிழிவு நோய் இன்னும் பத்து ஆண்டுகளில் இருக்கும் என ஆய்வுகள் தெரிவித்திருக்கிறது.
சர்க்கரை நோயை சமாளிப்பதும் சாத்தியமே! விரைவில் நீரிழிவு நோய் உள்ளவர்கள் மற்றவர்களைப்போல சாதாரண வாழ்வுக்கு மாறும் காலம் வந்து விட்டது!

அன்று ரத்தத்தில் சர்க்கரை அளவு 140 மி.கி. அளவுக்கு மேல் இருந்தால் நீரிழிவு நோய் என்று சொன்னார்கள். இன்று 140 மி.கி. அளவை தாண்டினாலே உங்களுக்கு பாதிப்பு அதிகம் என்று சொல்லப்படுகிறது.

IFG என்பது Impaired Fasting Gulucose காலையில் வெறும் வயிற்றில் 110 மி.கி. அளவுக்கு மேல் போனால் IGT என்பது Impaired Gulucose Toterance உணவு உட்கொண்டு இரண்டு மணி நேரம் கழித்து 140 மி.கி. அளவை தாண்டிவிட்டது. அப்படிப்பார்த்தால் இன்றைய நிலையில் 20 விழுக்காடு இதில் ஏதாவது ஒருவகையில் சேருவார்கள். நீங்களும் உடனடியாக பரிசோதித்து பாருங்கள். அப்படியிருந்தால் உடனடியாக சிகிச்சை முறையை மேற்கொள்ள வேண்டும்.

உடல் உழைப்புடன் வாழ்க்கை முறையை மாற்றி அமைத்துக் கொள்ளுங்கள். சோம்பேறித்தனத்திற்கு விடை கொடுங்கள். அன்று சிறுநீரில் சர்க்கரை அளவைப் பார்த்து சிகிச்சை அளிக்கப்பட்டது. இன்று சிறுநீரில் அளவு காலாவதியாகி விட்டது. ரத்தத்தில் சர்க்கரை அளவு மட்டுமல்ல, கொழுப்பான அளவும், ரத்தக்கொதிப்பு எனும் Hypertension. உடல் எடை, வாழ்க்கை முறை ஆகியவற்றை கருத்தில் கொண்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

கொழுப்புச் சத்து பற்றி அன்றைய சிகிச்சை முறையில் கணக்கிடப்படவில்லை இன்று இதுவும் முக்கியம் என்றாகி விட்டது. அன்று வேளைக்கு அல்லது நாளுக்கு ஒரு மாத்திரை என சொல்லப்பட்டது. இன்று சர்க்கரை வியாதி வந்து விட்டால் சர்க்கரையை கட்டுப்படுத்த மட்டுமல்ல, கொழுப்புச்சத்தை கட்டுப்படுத்த, சிறுநீர் பாதிப்பை தடுக்க, ரத்தக்குழாய்களில் அடைப்பதை தடுக்க என சிகிச்சை அவசியமாகிவிட்டது.

அன்று இன்சுலின் ஊசி கடைசி ஆயுதமாக சிகிச்சை முறையில் இருந்தது. இன்று தேவைக்கு ஏற்ப இன்சுலின் சிகிச்சை உண்டு. பாதிப்புகளைத் தடுக்க மாத்திரையில் இருந்து இன்சுலினுக்கு மாறலாம். சர்க்கரை அளவு கட்டுப்பாட்டுக்குள் வந்தபின் இன்சுலினிலிருந்து மாத்திரைக்கு மாறலாம்.

முன்பு 3 மாத கட்டுப்பாட்டை அறிய வழி இல்லை இன்று HbAIC என்னும் பரிசோதனையைச் செய்தால் உங்கள் கட்டுப்பாட்டின் நிலைமை புரிந்து விடும். அன்று இன்சுலின் ஊசியை கண்டாலே பயம். இன்று வலி இல்லாத பேனா வகை இன்சுலின் சிகிச்சை கிடைக்கிறது. இன்று இதனால் ஏற்படும் சிறுநீரக செயலிழப்பு, மாரடைப்பு மற்றும் நரம்பு மண்டல பாதிப்பு, ரத்தக்குழாய்களின் அடைப்பு என பாதிப்புகளைத் தடுக்கும் முறை அவசியமாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

முன்பு நீரிழிவாய் கண்களில் ஏற்படும் பாதிப்புகளை களைய சிகிச்சை முறை குறைவு. இன்றைய லேசர் முறை சிகிச்சைகள் அபரிமிதமான வளர்ச்சியில் சிகிச்சையில் பல்வேறு பரிணாமங்களைத் தொட்டு வருகிறது. நீரிழிவு நோய் & Life Style disease: வாழ்நாள் முழுவதும் சிகிச்சை முறை அவசியம் என இன்று வற்புறுத்தப்படுகிறது. இந்நோய் தடுப்பு முறைகள் தற்போது திருமணத்திற்கு முன்பாக, குழந்தைப் பேறுக்கும் முன்பாக, முடியாவிட்டால் குழந்தைப் பருவத்திலிருந்தே மேற்கொள்ளப்பட வேண்டும்.

இந்தக்கேள்வி இந்நோய் தடுப்பதில் அனைவரும் பங்கேற்க வேண்டும். பலகரங்கள் இணைந்தால் மட்டுமே இது சாத்தியம். இப்படி அனைவரின் ஒத்துழைப்பு இன்று அவசியமாகி விட்டது. விழிப்புணர்வு மட்டுமே இந்நோயை தடுக்கும் தாரக மந்திரம்!

டாக்டர் பி.செல்வம்
Tags:    

Similar News