லைஃப்ஸ்டைல்
சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் உயர் ரத்த அழுத்தம்

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் உயர் ரத்த அழுத்தம்

Published On 2019-11-15 07:32 GMT   |   Update On 2019-11-15 07:32 GMT
சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் உயர் ரத்த அழுத்தம் எந்த வகையில் மாறுபட்டது? அதன் பாதிப்புகள் என்ன? எவ்வாறு கட்டுப்படுத்துவது? என்று அறிந்து கொள்ளலாம்.
சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் உயர் ரத்த அழுத்தம் எந்த வகையில் மாறுபட்டது? அதன் பாதிப்புகள் என்ன? எவ்வாறு கட்டுப்படுத்துவது? என்பது போன்ற கேள்விகளுக்கு நாகர் கோவில் “சர்க்கரை நோய் சிகிச்சை மையத்தின்” டாக்டர் ஆர்.ராஜபால் விளக்கம் அளிக்கிறார்.

முதலில் உயர் ரத்த அழுத்தத்தை உறுதி செய்ய வேண்டும். ஒரே ஒரு முறை ரத்த அழுத்தம் பரிசோதித்து மருந்து கொடுப்பதில்லை. மன அழுத்தம், தூக்கமின்மை, உயர் ரத்த அழுத்தத்திற்கு எதிரி. மருத்துவரின் அறைக்கு வெளியில் காத்திருக்கும் போது அலைபேசி அழைப்பு, புகைபிடித்தல், காபி குடிப்பது, ஏதாவது எதிர்மறையான எண்ணங்கள் மற்றும் உரையாடல் களும் தற்காலிக மாக ரத்த அழுத்தத்தை அதிகரிக்கலாம். வாகனம் ஓட்டும்போது சிக்கலான சூழ்நிலையில் திடீரென்று ரத்த அழுத்தம் அதிகரித்து மீண்டும் சீராகும். வேறு எந்த பதட்ட நிலையிலும் ரத்த அழுத்தம் அதிகரிக்கும். இவற்றை எவ்வாறு கையாள்வது என்று மருத்துவர் முடிவு செய்வார். குழம்ப வேண்டாம்.

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் உயர் ரத்த அழுத்தம் சற்று மாறுபட்டது. சர்க்கரை நோய் கண்டுபிடிக்கப்படும் அன்றே சிலருக்கு உயர் ரத்த அழுத்தமும் இருக்கிறது. பலருக்கு சில வருடங்கள் சென்றபின், உயர் ரத்த அழுத்தமும் சர்க்கரை நோயுடன் சேர்ந்து கொள்ளும். இன்சுலின் எதிர்ப்பு திறனால் உடலில் இருந்து சிறுநீரில் வெளியேற வேண்டிய உப்பு முழுமையாக வெளியாவ தில்லை. மேலும் பொதுவாக இரவு நேரத்தில் ரத்த அழுத்தம் சற்று குறைவாக இருக்கும். பல சர்க்கரை நோயாளி களுக்கு இரவில் இந்த குறைவு ஏற்படுவதில்லை. இவர்களுக்கு இதய துடிப்பின் வேகம் சற்று அதிகமாக இருக்கும். ஆதலால் சரக்கரை நோயாளிகளுக் கான உயர் ரத்த அழுத்த மருந்துகள் மாறுபடும்.

சர்க்கரை நோயினால் ஏற்படும் பாதிப்புகள் உயர்ரத்த அழுத்தத்தால் மோசமடை கின்றன. அதே போன்று உயர்ரத்த அழுத்தத்தினால் சர்க்கரை நோயின் பாதிப்புகள் அதிகரிக்கின்றன. இவையிரண் டுமே, மூளை, கண்கள், இதயம் மற்றும் சிறுநீரகங்களை பாதிக்கின்றன. பக்கவாதம், சிறுநீரக பாதிப்புகளுக்கான வாய்ப்பு அதிகம். ரத்தத்தில் சர்க்கரையின் அளவையும், உயர் ரத்த அழுத்தத் தையும் கட்டுப்பாட்டில் வைத்திருந் தால் பாதிப்புகள் ஏற்படுவ தில்லை.

கண்களை வருடத்திற்கு ஒருமுறை பரிசோதித்துக் கொள்ள வேண்டும். சிறுநீரக பாதிப்பை தவிர்க்க சிறுநீரில் நுண்புரதம் வெளியாவதை கண்டறிந்து அதற்கான மருந்துகளை உட்கொள்ள வேண்டும். நடைமுறை வாழ்க்கையில் சிரமங்கள் இல்லா விட்டாலும் இதய நோய்க்கான பரிசோதனை தேவை.

உணவில் உப்பு, கொழுப்பு பொருட்களை கட்டுப்படுத்த வேண்டும். புகை பிடிப்பதை அடியோடு நிறுத்த வேண்டும். தொடர் மறுபரிசோதனை மிகவும் முக்கியம். பலரும் சர்க்கரை நோய், உயர்ரத்த அழுத்தம் இரண்டை யும் கட்டுப்படுத்தி நீண்ட காலம் நலமுடன் வாழ்ந்து வருகின்றனர். முன்னெச்ச ரிக்கையுடன் செயல்பட்டு பாதிப்புகளை தவிர்த்து நலமுடன் வாழவேண்டும் என்பதே இந்த தகவல்களின் நோக்கம். கலக்கமோ, பயமோ வேண்டாம்.

இவ்வாறு டாக்டர் ராஜபால் கூறினார்.

டாக்டர் ஆர்.ராஜபால், சர்க்கரை நோய் சிகிச்சை மையம், நாகர்கோவில்.
Tags:    

Similar News