லைஃப்ஸ்டைல்
சத்துகள் நிறைந்த கேழ்வரகு, கம்பு

சத்துகள் நிறைந்த கேழ்வரகு, கம்பு

Published On 2019-10-08 07:41 GMT   |   Update On 2019-10-08 07:41 GMT
கேழ்வரகு, கம்பில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இவை இரண்டும் நீரிழிவு நோயாளிகளுக்கு, இது சிறந்த உணவாக பரிந்துரை செய்யப்படுகிறது.
கேழ்வரகு: இது இந்தியாவில் தோன்றிய பயிராகும். வேறு எந்த தானியங்களிலும் இல்லாத அளவு, 100 கிராம் தானியத்தில், 344 மில்லி கிராம் சுண்ணாம்பு சத்து கேழ்வரகில் உள்ளது.

சோளம் தவிர்த்த பிற தானியங்களை விட அதிகமாக, 100 கிராம் தானியத்தில், 3.9 மில்லிகிராம் இரும்புச் சத்து இதில் உள்ளது. நீரிழிவு நோயாளிகளுக்கு, இது சிறந்த உணவாக பரிந்துரை செய்யப்படுகிறது.

கேழ்வரகு வழக்கமாக குழந்தைகள் பால் குடிக்க மறக்க செய்யப்படும் வேலைகளில் மாற்று உணவாக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கம்பு: பல்வேறு தொழிற்சாலை மூலப்பொருளாக கம்பு பயன்படுகிறது. 100 கிராம் தானியத்தில், 11.6 கிராம் புரதச்சத்தும், 67.5 கிராம் மாவுச்சத்தும், 8 மில்லி கிராம் இரும்புச்சத்தும் மற்றும் கண்களை பாதுகாக்க பெரிதும் உதவும் 132 மைக்ரோ கிராம் கரோட்டின் ஆகியவை அடங்கியுள்ளன. எதிர்மறை சத்துகளான பைடிக் அமிலம், பாலிஃபீனால் மற்றும் அமைலேஸ் குறைப்பான்கள் ஆகியவை இருந்த போதும், தண்ணீரில் ஊற வைத்தல், சமைத்தல், முளைக்க வைத்தல் போன்றவற்றால் இவற்றின் பாதிப்புகளை குறைக்க முடியும்.

கம்பு, நம் நாட்டில் முக்கிய உணவு மற்றும் தீவனமாக பெரிதும் பயன்படுத்தப்படுகிறது.
Tags:    

Similar News