லைஃப்ஸ்டைல்
சாப்பாட்டில் முடி கிடந்தால்..?

சாப்பாட்டில் முடி கிடந்தால்..?

Published On 2019-09-12 07:33 GMT   |   Update On 2019-09-12 07:33 GMT
சாப்பாட்டில் முடி கிடந்தால் உறவு நீடிக்குமோ இல்லையோ அது ஒருபோதும் உடல் நலத்தை காக்காது. அது உடல்நலத்துக்கு தீமையைத்தான் உண்டாக்கும்.
சாப்பாட்டில் முடி கிடந்தால் உறவு நீடிக்குமோ இல்லையோ அது ஒருபோதும் உடல் நலத்தை காக்காது. அது உடல்நலத்துக்கு தீமையைத்தான் உண்டாக்கும். சின்ன சின்ன கற்கள், உலோகங்களின் துகள், பூச்சிகள், பல்லி போன்றவை அடிக்கடி உணவில் விழுந்துவிடுவது வழக்கம். இருந்தாலும் கூட உலக அளவில் உணவில் அதிகமாக விழும் பொருள் என்றால் அது முடிதான் என்று கூறப்படுகிறது. சராசரியாக ஒரு ஆளுக்கு தினமும் 50 முதல் 100 முடி வரை உதிர்ந்து கொண்டே இருக்கும். மனிதனின் முடியானது கெரட்டின் என்னும் புரதத்தினால் ஆனது. இந்த புரதம்தான் நம்முடைய தோல் மற்றும் நகப்பகுதிகளின் மேல் புறத்தில் இருக்கும்.

உணவுக்குள் கிடக்கின்ற உணவுப் பொருளைத் தவிர வேறு எவையும் உணவை கெடுத்துவிடும். உணவில் முடி கிடப்பது உடல் நலத்தை கெடுப்பதோடு நுண்ணுயிரியல் மாற்றத்தை ஏற்படுத்தும். உணவில் இருக்கும் முடி, உணவில் நுண்ணுயிரிகளை ஏற்படுத்தும். பதப்படுத்தப்பட்ட உணவுகள், மாதக் கணக்கில் வைத்துப் பயன்படுத்தும் ஊறுகாய் போன்றவற்றில் முடி இருந்தால் அவை நோய்க் கிருமிகளுக்கு வழிவகுக்கும் என்று இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.



வெறும் முடிக்கே இந்த நிலைமை என்றால் அந்த முடியில் தேய்ந்திருக்கும் எண்ணெய், வியர்வை, முடியில் தேய்த்திருக்கும் வேறு மருந்துகள், கெமிக்கல் கலந்த ஷாம்பு, ஹேர் டையில் கலந்திருக்கும் பொருட்கள் போன்றவற்றால் ஏற்படும் விளைவுகளைப் பற்றி கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். இது நிச்சயம் உணவிலும் கலந்து உங்களுக்கு அருவருப்பை மட்டுமல்ல அழற்சியையும் உண்டாக்கும். நாம் சாப்பிடுகின்ற பொழுது சாதாரணமாக முடி வயிற்றுக்குள் சென்று விட்டால் அது அயல்பொருள் என்பதால் தானாகவே நமது உடல் அதை வெளியேற்றிவிடும். ஆனால் அந்த முடியில் ஏதேனும் தொற்றுக்கள் இருந்தால் அது உடலில் நச்சுக்களை சேர்த்துவிடும்.

அப்படி நம்முடைய உடலில் சேருகின்ற நச்சுப் பொருட்கள் வயிற்றுப்போக்கு போன்றவற்றை ஏற்படுத்தும். அப்படி வயிற்றுப்போக்கு ஏற்படுகின்ற பொழுது, அதை நிறுத்தும் முயற்சியில் நீங்கள் ஈடுபடக் கூடாது. அப்படி வயிற்றுப்போக்கை நிறுத்த நினைத்தால் முடி வெளியேறாமல் போய்விடும். வயிற்றிலேயே தங்கிவிடும். வயிற்றுப்போக்கு நிற்காவிட்டால் உடலில் நீர்ச்சத்து இழப்பு ஏற்படும். உடல் சோர்வு உண்டாகும். எனவே வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுக வேண்டும். பெரும்பாலும் உடலுக்குள் செல்லுகின்ற ஓரிரு முடிகள் உடலில் பெரிய விளைவுகளை ஏற்படுத்தாது. வீட்டில் சாப்பிடுகின்ற பொழுது, சாப்பாட்டில் மட்டும் கவனம் செலுத்தி சாப்பிட்டாலே போதும். முடி உணவோடு வயிற்றுக்குள் போவதை தடுத்துவிட முடியும். 
Tags:    

Similar News