உடற்பயிற்சி
ஆதி முத்திரை, வருண முத்திரை

தசைகள் நன்கு இயங்க உதவும் முத்திரைகள்

Update: 2022-02-03 02:33 GMT
உடல் உள் உறுப்புகளில் ஏதேனும் சரியாக இயங்கவில்லை என்றாலும் தோல் தசைகளில் அரிப்பு, புண் ஏற்படும். கணையம் நன்றாக இயங்கவில்லை என்றால் தோல்களில் அரிப்பு, புண் ஏற்படும், ஆறாமல் இருக்கும்.
மனித உடல் இயக்கம் பற்றி ஆராயும் பொழுது நமது உடலில் அனைத்து உறுப்புகளும் முக்கியமானது தான்.  அதில் இறைவன் அனைத்து உறுப்புகளையும் உள்ளே வைத்து எந்த ஒரு தையலும் இல்லாமல் தோலால் மூடி அழகாக படைத்துள்ளான்.  இந்த தோல் தசைகளின் மூலமாக பிராண சக்தி உடலுக்கும் செல்கின்றது.  உடல் ஆரோக்கியத்திற்கு தசைகள் மிக முக்கியமானதாகும்.  பிரபஞ்சத்தின் சக்திகள்.  பிராண ஆற்றல் தசைகளின் மூலம் உள்ளே செல்லும்.  அதுபோல் உடல் கழிவுகள் வியர்வையாக தசைகளின் வழியாக வெளியே வரும்.  நல்ல பிராணன் உள்ளே செல்வதற்கும், கழிவுகள் வெளியே வருவதற்கும் தசைகளின் இயக்கம் நன்றாக இருக்க வேண்டும்.

உடல் உள் உறுப்புகளில் ஏதேனும் சரியாக இயங்கவில்லை என்றாலும் தோல் தசைகளில் அரிப்பு, புண் ஏற்படும். கணையம் நன்றாக இயங்கவில்லை என்றால் தோல்களில் அரிப்பு, புண் ஏற்படும், ஆறாமல் இருக்கும்.

ஒவ்வொரு மனிதனும் தசைகள் நன்கு இயங்க கீழே குறிப்பிட்ட முத்திரையை  பயிற்சி செய்யவும்.

வருண முத்திரை: விரிப்பில் நிமிர்ந்து அமரவும்.  முதுகெலும்பு நேராக இருக்கட்டும்.  கண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சை பத்து வினாடிகள் கவனிக்கவும்.  பின் சுண்டுவிரல் பெருவிரல் நுனியை இணைக்கவும்.  மற்ற மூன்று விரல்கள் தரையை நோக்கி இருக்கட்டும்.  இருகைகளிலும் செய்யவும்.  காலை / மாலை சாப்பிடும்முன் இரண்டு நிமிடம் முதல் ஐந்து நிமிடங்கள் பயிற்சி செய்யவும்.

குளியல்:தினமும் காலை / மாலை இருவேளை குளிக்கவும்.  சோப்பிற்கு பதில் பாசிப்பருப்பு மாவு, கடலை மாவு தேய்த்து குளிக்கவும்.வாரம் ஒரு நாள் எண்ணெய் தேய்த்து குளிக்கவும்.

ஆதி முத்திரை:விரிப்பில் நிமிர்ந்து அமரவும்.  முதுகெலும்பு நேராக இருக்கட்டும்.  கண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சை பத்து வினாடிகள் கவனிக்கவும்.  பின் கட்டை விரலை உள்ளங்கையில் வைத்து மீதி நான்கு விரல்களையும் படத்தில் உள்ளது போல் மடித்து இரு கைகளிலும் செய்யவும்.  இந்த முத்திரையில் இரு நாசி வழியாக மெதுவாக மூச்சை இழுத்து மிக மெதுவாக மூச்சை வெளிவிடவும் பத்து முறைகள். பின் சாதாரண மூச்சில் இரண்டு நிமிடங்கள் இருக்கவும்.  காலை / மாலை சாப்பிடும்முன் இரண்டு நிமிடம் முதல் ஐந்து நிமிடங்கள் பயிற்சி செய்யவும்.

தியானம்:விரிப்பில் சுகாசனத்தில் நிமிர்ந்து அமரவும்.  மெதுவாக மூச்சை இருநாசி வழியாக இழுத்து மிக மெதுவாக மூச்சை வெளிவிடவும்.  மூச்சை உள் இழுக்கும் பொழுது நல்ல சக்தி வாய்ந்த பிராணக் காற்றை உள் இழுப்பதாக எண்ணவும்.  மூச்சை வெளிவிடும்பொழுது நமது உடல், மனம் அதிலுள்ள டென்ஷன் வெளியேறுவதாக எண்ணவும்.  உடல் வெளி தசைகள் முழுக்க நல்ல பிராணக் காற்று கிடைப்பதாக எண்ணவும்.  பின் இயல்பாக நடக்கும் மூச்சை மட்டும் நெற்றி புருவ மத்தியில் 5  நிமிடங்கள் தியானிக்கவும்.

யோகக் கலைமாமணி
பி,கிருஷ்ணன் பாலாஜி M.A.(Yoga)
63699 40440
Tags:    

Similar News