உடற்பயிற்சி
வக்கிராசனம்

கழுத்து வலியை குணமாக்கும் வக்கிராசனம்

Update: 2021-12-15 02:28 GMT
இந்த ஆசனத்தை செய்வதால் முதுகுத்தண்டின் நெகிழ்வுத்தன்மை அதிகரித்து முதுகெலும்புகளுக்கிடையிலான இறுக்கத்தை குறைக்கிறது. இந்த ஆசனம் செய்முறையை பார்க்கலாம்.
வக்கிராசனம் என்றால் முறுக்கிய நிலை ஆகும். வடமொழியில் வக்கிரம் என்றால் முறுக்குதல் (twisted) ஆகும். முதுகுத்தண்டினை இடபுறமாகவும், பின் வலபுறமாகவும் முறுக்கி செய்வது ஆகும். இதனால், முதுகுத்தண்டின் நெகிழ்வுத்தன்மை அதிகரித்து முதுகெலும்புகளுக்கிடையிலான இறுக்கத்தை குறைக்கிறது. உடல் முறுக்குவதால் இடுப்பு பகுதி பலப்படுகிறது. முக்கியமாக சீரண மண்டலத்தின் இயக்கத்தை மேம்படுத்துகிறது.

பலன்கள்

மலச்சிக்கலை போக்குகிறது. சீரணத்தை மேம்படுத்துகிறது. கழுத்து வலியை போக்குகிறது. தைராய்டு சுரப்புகளின் செயல்பாட்டை ஊக்குவிக்கிறது.
வயிற்றிலுள்ள அதிக கொழுப்பை குறைக்கிறது. மாதவிடாய் கோளாறுகளை போக்குகிறது. வயிற்று உள் உறுப்புகளின் செயல்பாடுகளை மேம்படுத்துகிறது.

செய்முறை

விரிப்பில் கால்களை நீட்டி அமரவும். வலது காலை மடித்து வலது பாதத்தை இடது கால் முட்டியின் அருகே வைக்கவும். வலது கையை வலது புட்டத்திற்கு பின்னால் தரையில் வைக்கவும்.இடது கையை வலது முட்டியின் மேல் வழியாக கொண்டு வந்து வலது கணுக்காலை பிடிக்கவும். தலையை திருப்பி முகவாயை வலது தோளுக்கு நேர் மேலே வைக்கவும். 30 வினாடிகள் இதே நிலையில் இருந்த பின் காலை மாற்றி செய்யவும்.

குடலிறக்கம், அல்சர் மற்றும் தீவிர முதுகுத்தண்டு கோளாறு உள்ளவர்கள் இந்த ஆசனத்தை தவிர்ப்பது நல்லது.
Tags:    

Similar News