லைஃப்ஸ்டைல்
முதுகு வலி வராமல் தடுக்கும் ஸ்பைன் எக்ஸ்டென்ஷன் பயிற்சி..

முதுகு வலி வராமல் தடுக்கும் ஸ்பைன் எக்ஸ்டென்ஷன் பயிற்சி..

Published On 2020-02-04 03:39 GMT   |   Update On 2020-02-04 03:39 GMT
அதிக நேரம் உட்கார்ந்தே வேலை செய்பவர்களுக்கு முதுகு வலி கண்டிப்பாக வரும். இந்த முதுகு வலியை குணமாக்கும் உடற்பயிற்சிகளை பார்க்கலாம்.
இரு சக்கர வாகனம் ஓட்டும் எல்லோருக்குமே பெரும்பாலும் முதுகுவலி மிக வேகமாகவே வந்துவிடும். மேலும் அதிக நேரம் உட்கார்ந்தே வேலை செய்பவர்களுக்கும் முதுகு வலி கண்டிப்பாக வரும். இன்று இந்த முதுகு வலியை குணமாக்கும் உடற்பயிற்சிகளை பார்க்கலாம்.

1. குப்புறப் படுத்தபடி, வலது காலை 45 டிகிரி அளவுக்கு, முட்டியை மடக்காமல் நேராக உயர்த்தவும். இதே நிலையில் 15 வினாடிகள் இருக்கவும். திரும்பவும் பழைய நிலைக்குக் கொண்டு வரவும். 5 வினாடிகள் ஓய்வுக்குப் பிறகு, இடது காலுக்கும் இதே பயிற்சியைச் செய்யவும்.

2. குப்புறப் படுத்தபடி, தலையை மட்டும் உயர்த்தவும். இதே நிலையில் 15 வினாடிகள் இருக்கவும்.

3. குப்புறப்படுத்தபடி, வலது காலையும் இடது கையையும் ஒருசேர, உயர்த்தவும். இதே நிலையில் 15 வினாடிகள் இருக்கவும்.

பிறகு ஓய்வு நிலைக்குத் திரும்பியவுடன், இடது காலையும் வலது கையையும் தூக்கி, இதே பயிற்சியை செய்யவும்.

4. குப்புறப் படுத்தபடி, இரண்டு கால்களையும் முட்டி மடங்காமல் நேராகத் தூக்கவும். இதே நிலையில் 15 வினாடிகள் இருக்கவும். இந்தப் பயிற்சி சற்று கடினமானது, எனினும் தொடர்ந்து முயற்சிக்கவும்.
Tags:    

Similar News