லைஃப்ஸ்டைல்
பால் குடிக்கும் குழந்தை

பால், நெய் - குழந்தைகளுக்கு எந்தளவில் தரலாம்?

Published On 2021-07-30 06:17 GMT   |   Update On 2021-07-30 06:17 GMT
பால், வெண்ணெய், நெய் போன்றவற்றைக் குழந்தைகளுக்குத் தவிர்ப்பது சரியா? சரியில்லை என்றால், எந்த அளவு தர வேண்டும்? எந்த நேரத்தில் கொடுக்க வேண்டும்? என்று பார்க்கலாம்.
குழந்தைப் பருவத்தில் புறங்கையில் வழிய வழிய வெண்ணெய் சாப்பிட்ட தலைமுறைதான், இன்றைக்கு முப்பதுகளில் இருக்கிறது. பருப்பு சாதத்திலும் வற்றல்குழம்பு சாதத்திலும் உருக்கிய நெய்யைத் தளரவிட்டு, கையும் வாயும் மணக்க மணக்கச் சாப்பிட்டவர்களும் மேலே சொன்ன தலைமுறைதான். இடையில் ஏற்பட்ட கொழுப்புப் பயத்தில், வெண்ணெயையும் நெய்யையும் சாப்பிடுவதை அவர்கள் நிறுத்தியதோடு, அடுத்தத் தலைமுறைக்கும் இவற்றைத் தருவதை நிறுத்திவிட்டார்கள். சில வீடுகளில், பாலையும் நிறுத்திவிட்டார்கள். இப்படிப் பால், வெண்ணெய், நெய் போன்றவற்றைக் குழந்தைகளுக்குத் தவிர்ப்பது சரியா? சரியில்லை என்றால், எந்த அளவு தர வேண்டும்? எந்த நேரத்தில் கொடுக்க வேண்டும்? என்று பார்க்கலாம்.

''ஓடியாடி விளையாடும் குழந்தைகளுக்கும், வளர்ந்த பிள்ளைகளுக்கும் பால், வெண்ணெய், நெய் மூன்றையும் கட்டாயம் கொடுக்கவேண்டும். ஏனென்றால், வளரும் மற்றும் பதின் பருவத்தில் இருக்கும் பிள்ளைகளுக்குத் தேவையான புரதம் மற்றும் கொழுப்பு, இந்த மூன்று உணவுப் பொருள்களில் தாராளமாக இருக்கின்றன. புரதம், குழந்தைகளின் தசை வளர்ச்சிக்கும் கொழுப்பு, ரத்த நாளங்கள் போன்ற நுண்ணுறுப்புகளின் வளர்ச்சிக்கும் தேவை.

டாக்டர் வேலாயுதம்சிலர், வெண்ணெய் மற்றும் நெய்யைக் குழந்தைகளுக்குக் கொடுத்தால், உடற்பருமனாகிவிடுவார்களோ என அச்சப்படுகிறார்கள். உண்மை என்ன தெரியுமா? ஓட்டமும் விளையாட்டுமாக இருக்கும்
குழந்தை
களுக்கு இந்த மூன்றையும் செரிமானம் செய்யும் அளவுக்கு ஜீரண சுரப்பிகள் நன்றாக வேலை செய்யும். இதனால், வெண்ணெயிலும் நெய்யிலும் இருக்கும் புரதமும் கொழுப்பும் எனர்ஜியாக மாறி, பிள்ளைகளைச் சுறுசுறுப்பாக வைத்திருக்கும். வெண்ணெயும் நெய்யும் குழந்தைகளை குண்டாக்கிவிடும் என்றே பயமே தேவையில்லை.

நம் ஊரில் வெயில் காலம்தான் நீண்டதாக இருக்கிறது. இதனால், குழந்தைகள் உடல் சூட்டால் கஷ்டப்படுவார்கள். சித்த மருத்துவத்தின்படி, வெண்ணெய் நம் உடலை குளிர்ச்சிப்படுத்தக்கூடியது. இதில், சர்க்கரையைக் கொட்டி, க்ரீமாக மாற்றி கேக்குடன் சாப்பிடும்போதுதான் கேடு தரும் உணவாக மாறிவிடுகிறது. நெய்யில் இருக்கும் கொழுப்பு, மாரடைப்பை ஏற்படுத்தும். அதனால்,
குழந்தை
ப் பருவத்திலேயே அவாய்டு செய்துவிடலாம் என நிறைய அம்மாக்கள் முடிவெடுத்துவிட்டார்கள். உண்மை தெரிந்தால், பிள்ளைகளுடன் சேர்ந்து அம்மாக்களும் உணவில் சேர்த்துக்கொள்வார்கள். நெய்யில் இருக்கும் கொழுப்பானது, ரத்த நாளங்களின் உள்சுவர்களில் படியாத தன்மையைக்கொண்டது. அப்புறம் எப்படி ரத்தநாளங்களின் உள்சுவரை சுருக்கி, ஹார்ட் அட்டாக்கை ஏற்படுத்தும்?

நெய்யைச் சாப்பிடுவதற்கு ஒரு நடைமுறை இருக்கிறது. வெண்ணெயைக் காய்ச்சும்போது, முருங்கையிலையைப் போட்டுக் காய்ச்சுவார்கள். முருங்கையிலையில் இருக்கும் பைட்டோ கெமிக்கல்ஸ், நெய்யில் இருக்கும் கொழுப்பு மூலக்கூறுகளை தனித்தனியே பிரித்துவிடும். சுடு சாதத்தில் போட்டுப் பிசையும்போதும், தோசையைச் சுற்றிலும் விடும்போதும் நெய்யானது உருகி, மறுபடியும் அதன் கொழுப்பு மூலக்கூறுகள் தனித்தனியாக பிரிய ஆரம்பிக்கும். இந்த முறையில் நெய்யை உங்கள்
குழந்தை
களுக்குத் தினமும் ஒரு டீஸ்பூன் அளவுக்குக் கொடுத்துவந்தால், அவர்களின் உடம்பு, தேவையான சத்துக்களை உணவுகளிலிருந்து பெற்று வலுவாக மாறும். ஜீரணத் தொந்தரவுகள் வராது, மந்தமும் ஏற்படாது.

நெய்க்கு இன்னொரு நல்லத்தன்மையும் இருக்கிறது. குழந்தைகளின் சின்னச் சின்ன எலும்புகளுக்கும் மூட்டுகளுக்கும் இடையில் நல்ல லூப்ரிகேஷனை ஏற்படுத்தும். பெண்களுக்கும் கை, கால் மற்றும் கழுத்து எலும்புகளில் முப்பதுகளிலேயே வரக்கூடிய ஸ்பான்டிலிட்டிஸ் பிரச்னைகளைத் தடுக்கும்.

நார்மலான உடல்வாகுகொண்ட பெண்கள், நாளொன்றுக்கு 10 மில்லிகிராம் நெய் எடுத்துக்கொள்ளலாம். 5 முதல் 15 வயதுக்குள்ளான குழந்தைகள் என்றால், தினமும் 25 கிராம் எடுத்துக்கொள்ளலாம். வெண்ணையையும் இதே அளவில் வாரத்துக்கு இரண்டு நாள்கள் மட்டும் எடுத்துக்கொள்ளலாம். குழந்தைகளும் சரி, பெண்களும் சரி, இரண்டு கப் பால் தினமும் சாப்பிடலாம். ஆனால், வெள்ளைச் சர்க்கரை கூடவே கூடாது. அதற்குப் பதில் பனங்கற்கண்டும் மஞ்சள்தூளும் சேர்த்துத் தர வேண்டும். இரவு நேரத்தில்
குழந்தை
களுக்கு பால், நெய் இரண்டும் தரலாம். வெண்ணெய் மட்டும் கூடாது. செரிமானம் ஆகாது'' என்கிற மருத்துவர் வேலாயுதம், வெண்ணெயையும் நெய்யையும் வாங்கியதில் இருந்து எவ்வளவு நாள்கள் வைத்துப் பயன்படுத்தலாம் என்பதுப் பற்றியும் சொன்னார் .

''வெண்ணெயோ, நெய்யோ அதை உருவாக்கியதில் இருந்து 3 மாதங்கள் வரை குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். அதன்பிறகு அவற்றில் இருக்கிற நல்லத்தன்மைக் குறைய ஆரம்பித்து விடும் என்பதால், குழந்தைகளுக்கு அஜீரணம் ஏற்படுத்தி விடும். லேசான மஞ்சள் நிறத்துடன் இருக்கிற வெண்ணெயும், மஞ்சள் நிறத்துடன் மணல் மணலாக இருக்கிற நெய்யும்தான் பசு வெண்ணெய் மற்றும் பசு நெய். இதுவே குழந்தைகளுக்கு ஏற்றதும்கூட.''
Tags:    

Similar News