லைஃப்ஸ்டைல்
விசித்திரங்களை விரும்பும் குழந்தைகள்

விசித்திரங்களை விரும்பும் குழந்தைகள்

Published On 2021-07-29 08:16 GMT   |   Update On 2021-07-29 08:16 GMT
இணையதளத்தில் குழந்தைகளை கவரும் மின் புத்தகங்கள் ஏராளம் இருக்கின்றன. அவற்றில் அவர்களுக்கு பிடித்தமான கதை புத்தகங்களை தேர்ந்தெடுத்து கொடுத்து, வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்த வேண்டும்.
குடும்ப அங்கத்தினர்கள் பெரும்பாலான நேரத்தை செல்போன், கணினியில் செலவிட்டுக்கொண்டிருக்கிறார்கள். அதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மனோரீதியாகவும், உடல்ரீதியாகவும் பாதிக்கப்படுகிறார்கள். அதனை கட்டுப்படுத்த புத்தகம் வாசிக்கும் வழக்கத்தை பின்பற்றவேண்டும் என்பது கல்வியாளர்களின் கருத்தாக இருக்கிறது.

தற்போது பெரும்பாலான குழந்தைகள் தொலைக்காட்சி, செல்போனில் பொழுதை போக்குவதற்கே ஆர்வம் காட்டுகின்றன. அத்தகைய குழந்தைகளிடம் கவனச் சிதறல், சோம்பல், மந்தநிலை, பிடிவாதம், பொறுப்பின்மை போன்றவை உருவாகிவிடுகின்றன. அவைகளில் இருந்து
குழந்தை
களை மீட்டெடுக்க வாசிப்பு பழக்கம் கைகொடுக்கும்.

வாசிப்பு என்பது வெறும் தகவல்களை தெரிந்து கொள்வது மட்டும் அல்ல. அறிவை வளர்த்துக்கொள்ளவும் உதவும். சத்தமாக வாசிப்பது பேச்சாற்றலை தூண்ட உதவும் என்று ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. எட்டு மாதத்திலேயே குழந்தைக்கு பயிற்சி அளிக்கலாம். குழந்தை புரிந்து கொள்ள தொடங்கியதும் அதன் முன்பு சத்தமாக பேச வேண்டும். அந்த சத்தத்தை குழந்தைகள் உற்று கவனிக்கும். புத்தகங்களில் இருக்கும் கதைகளை சத்தமாக வாசித்து சொல்லலாம். புலி, சிங்கம் போன்ற எல்லா கதைகளுமே குழந்தைகளை ஈர்க்கும்.

உதாரணமாக, விசித்திரமான கதைகள் குழந்தைளுக்கு ரொம்ப படிக்கும். அதனை விரும்பி கேட்பார்கள். அதில் இடம் பெறும் கதாபாத்திரங்களை எளிதான மனதில் பதிய வைத்துவிடுவார்கள். அவற்றின் பெயர்களை உச்சரித்து சொல்லிக்கொடுத்தால் சட்டென்று புரிந்துகொள்வார்கள். அவற்றின் உருவமும் மனதில் எளிதில் பதிந்துவிடும். கதை சொல்லி முடித்ததும் புத்தகத்தில் இருக்கும் படக்காட்சிகளை அப்படியே வரைவதற்கு பயிற்சி கொடுக்கலாம். அப்படி வரையும்போது கதையில் இடம் பெறும் சம்பவங்களை மீண்டும் விளக்கி சொல்லலாம். அதன் மூலம் கதை கேட்கும் ஆர்வமும், அதில் இடம்பெறும் கதாபாத்திரங்களை வரைந்து பார்க்கும் ஆர்வமும் மேலிடும்.

குழந்தைகள் புதிய கதைகளை தேடுவதற்கு ஆர்வம் காட்டுவார்கள். பிரிண்டிங் செய்யப்பட்ட புத்தகங்களைத்தான் படிக்க வேண்டும் என்றில்லை. அதனை படிப்பதற்கு ஆர்வம் குறைவாக இருந்தால் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்தும் படிக்கும் ஆர்வத்தை அதிகரிக்க செய்யலாம். இணையதளத்தில் குழந்தைகளை கவரும் மின் புத்தகங்கள் ஏராளம் இருக்கின்றன. அவற்றில் அவர்களுக்கு பிடித்தமான கதை புத்தகங்களை தேர்ந்தெடுத்து கொடுத்து, வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்த வேண்டும்.
Tags:    

Similar News