லைஃப்ஸ்டைல்
குறைப்பிரசவ குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள்...

குறைப்பிரசவ குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள்...

Published On 2019-12-28 02:51 GMT   |   Update On 2019-12-28 02:51 GMT
குறைப்பிரசவ குழந்தைகளுக்கு சில உடல் உபாதைகள் ஏற்படும். அவை என்வென்று அறிந்து கொள்ளலாம்.
குறைப்பிரசவ குழந்தைகளுக்கு நுரையீரல் வளர்ந்திருக்காது என்பதால் மூச்சுத்திணறல் ஏற்படும். முதலில் மூச்சுப்பிரச்னையை சரிசெய்வது அவசியம். குழந்தையின் நுரையீரலை திறந்துவிடுவதற்காக மெஷின் மூலம் ஆக்சிஜன் செலுத்துவது, நேரடியாக நுரையீரலில் ஊசி செலுத்தும் சிகிச்சைகளை செய்ய வேண்டும். குழந்தைகளின் சருமம் மிகமிக மெல்லியதாக இருக்கும்.

உள்ளிருக்கும் உறுப்புகளுக்கு தோல்தான் பாதுகாப்பு அரண் எனும்போது, தோலின் மூலம் எளிதாக உடலினுள் கிருமிகள் சென்றுவிடும். அதற்காக இந்தக் குழந்தைகளை பாதுகாப்பாக பிளாஸ்டிக் கவர் சுற்றி, இன்குபேட்டரில் வைத்திருப்போம். மேலும் இவர்களின் உடல் வெப்பநிலை குறைவாக இருக்கும் என்பதால் கதகதப்பிற்காகவும் இன்குபேட்டரில் வைக்க வேண்டும்.

கருவின் கடைசி 2 வாரங்களில்தான் செரிமான உறுப்புகளே வளர ஆரம்பிக்கும் என்பதால், குறைமாதக் குழந்தைகளுக்கு பால் அருந்துவதற்கான ஆற்றல், செரிமான ஆற்றல் இருக்காது. மூச்சை தம்பிடித்து இழுக்க முடியாத காரணத்தால் இந்தக் குழந்தைகள் தாயிடம் பால் அருந்தவும் முடியாது. இதன் காரணமாக அத்தனை ஊட்டச்சத்துக்களையும் ஊசி மூலமாகத்தான் சில வாரங்கள் வரை செலுத்த வேண்டியிருக்கும். 28 - 30 வாரங்களில் பிறக்கும் குழந்தைகள் மெதுவாக 2,3 வாரங்களுக்குப் பின்னர்தான் பால் குடிக்கவே ஆரம்பிப்பார்கள்.
Tags:    

Similar News