லைஃப்ஸ்டைல்
கூகுளும், மாணவர்களும்...

கூகுளும், மாணவர்களும்...

Published On 2019-12-16 02:35 GMT   |   Update On 2019-12-16 02:35 GMT
கல்வியாளர்களுக்கும், மாணவர்களுக்கும் கூகுள் பலவிதங்களில் பயன்பட்டு வருகிறது. கூகுளின் தேடுபொறி மாணவர்களின் தேடலை எளிதாக்கியிருக்கிறது
கூகுளின் தேடுபொறி (சர்ச் என்ஜின்) அறிமுகமான பின்பு, இணைய பயன்பாடு பெருகியது என்றால் மிகையில்லை. உலகளாவிய முன்னணி தேடுபொறியாக விளங்கும் கூகுள் பொது மக்களுக்கு மட்டுமல்லாது மாணவர் உலகத்துக்கும் மிகப்பெரிய பொக்கிஷத்தை வழங்கி உள்ளது. கல்வியாளர்களுக்கும், மாணவர்களுக்கும் கூகுள் பலவிதங்களில் பயன்பட்டு வருகிறது.

கூகுளின் ஓ.எஸ். மென் பொருள் இன்று ஸ்மார்ட்போன்களின் உயிர்நாடியாக விளங்குகிறது. சரிபாதிக்கும் மேற்பட்ட ஸ்மார்ட்போன்களில் கூகுளின் ஆண்ட்ராய்டு இயங்குதளமே பயன்படுத்தப்படுகிறது என்பது அதற்கு சிறந்த சான்று. அதுபோல டேப்லட், டெஸ்க்டாப், லேப்டாப், ஸ்மார்ட் டி.வி. என எல்லா எலக்ட்ரானிக் சாதனங்களிலும் கூகுளின் இயங்குதளங்கள் அடித்தளமாக உள்ளன.

கூகுளின் தேடுபொறி மாணவர்களின் தேடலை எளிதாக்கியிருக்கிறது. தகவல் களஞ்சியமாக, தகவல் சுரங்கமாக அளவில்லாத தகவல்களை தேடலுக்கேற்ப அள்ளியள்ளி தருகிறது.

மக்களின் தேவை மற்றும் தேடலுக்கு ஏற்ற எண்ணற்ற அப்ளிகேசன்களை வழங்கியிருக்கும் கூகுள், மாணவர் களுக்கும் கிளாஸ்ரூம், லென்ஸ், டிவைஸ் என பலவிதமான அப்ளி கேசன்களை வழங்குகிறது. சொந்த தயாரிப்பு அல்லாத ஏராளமான அப்ளிகேசன்களையும் அது சேகரித்து வினியோகிக்கிறது. வயதுக்கு ஏற்றவை, குறிப்பிட்ட கல்விக்கு ஏற்றவை, உபயோகத்திற்கு எளிமை யானவை, செலவு குறைந்தவை, இலவசமானவை என பலவிதங்களில் இந்த அப்ளிகேசன்கள் கிடைக்கின்றன.

கூகுள் வழங்கும் பல சேவைகள் தனிப்பட்ட ஒன்றின் சேவையாக அல்லாமல் ஆசிரியர்கள், கல்வி அமைப்புகள், மாணவர்கள் ஆகியோரின் கூட்டமைப்புகளின் சேவையாக இருப்பதால் அதன் திறனும், பலனும் வீரியம் மிக்கதாக உள்ளது. குறிப்பாக ஒரு கணக்கிற்கு ஒரு விடைதான் என்றாலும் அதற்கு பல வழிகள் இருக்கின்றன என்று அத்தனை வழிகளையும் காட்டுவதாக கூகுளின் சேவைகள் அமைந்துள்ளது என்றால் மிகையில்லை.

கூகுளின் அப்ளிகேசன்கள், மென்பொருட்கள் பயன்பாட்டு அளவில் எளிமையாகவும், தீர்வு தருவதில் முன்னிலையாகவும், உற்பத்தியை பெருக்குதல் மற்றும் திறன் மேம்பாட்டில் பங்களிப்பதாகவும் விளங்குகிறது. கூகுளின் சேவையை சிறப்பாக பயன் படுத்திக் கொள்ளும் மாணவர்கள், சாதனையாளர்களாக உயரலாம் என்பதில் சந்தேகமில்லை.
Tags:    

Similar News