வழிபாடு

தூய பேதுரு, தூய பவுல் தேவாலய திருவிழா

Published On 2022-07-01 04:17 GMT   |   Update On 2022-07-01 04:17 GMT
  • திருச்செந்தூர் அருகே ஆலந்தலையில் உள்ளது தூய பேதுரு, தூய பவுல் தேவாலயம்.
  • பங்கு தந்தை விக்டர் லோபோ கொடியிறக்கம் செய்து விழாவினை நிறைவு செய்தார்.

திருச்செந்தூர் அருகே உள்ள ஆலந்தலையில் தூய பேதுரு, தூய பவுல் தேவாலய திருவிழா கடந்த 19-ந்தேதி பங்கு தந்தை செட்ரிக்பீரிஸ் தலைமையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10-ம் திருவிழா காலை 5 மணிக்கு முதல் திருப்பலியும், காலை 7 மணிக்கு திருவிழா திருப்பலி இருதயராஜ் தலைமையில் நடந்தது. மாலை 6.30 மணிக்கு நற்கருணை சுற்றுப்பிரகார பவணி நடந்தது.

பவனி நடந்த வீதிகளை ஊர் பொதுமக்கள் வண்ண விளக்கு வளைவுகளால் அலங்கரித்திருந்தனர். மணப்பாடு வட்டார அதிபர் ஜான்செல்வம் தலைமையேற்று மறையுரையாற்றினார். இதில் பங்கு தந்தைகள் விக்டர் லோபோ, புரோமில்ட்டன், சில்வெஸ்டர், பனிமயம், டிமல், கிங்ஸ்டன், வில்லியம், ஆரோக்கியதாஸ், ஷிபாகர், பீட்டர்பால் மற்றும் 35 அருட் சகோதரிகள் மற்றும் ஊர் பொதுமக்கள், வெளியூர் பக்தர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

பங்கு தந்தை விக்டர் லோபோ கொடியிறக்கம் செய்து விழாவினை நிறைவு செய்தார். விழா ஏற்பாடுகளை பங்கு தந்தை ஜெயக்குமார், உதவி பங்கு தந்தை பாலன், ஊர்நலக்கமிட்டியினர் ரொசாரி மாதா சபையினர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News