வழிபாடு

வெள்ளி அங்கி அலங்காரத்தில் ஆஞ்சநேயர்.

சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் ஆஞ்சநேயருக்கு வெள்ளி அங்கி சார்த்தி சிறப்பு வழிபாடு

Published On 2022-08-10 05:40 GMT   |   Update On 2022-08-10 05:40 GMT
  • மூலம் நட்சத்திரத்தன்று ஆஞ்சநேயருக்கு வெள்ளி அங்கி சார்த்தி வழிபாடு நடைபெறுவது வழக்கம்.
  • இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். இங்கு பக்தர்கள் நினைத்த காரியத்தை நடத்தி கொடுக்கும் வல்லவராக 18 அடி உயரமுள்ள விஸ்வரூப ஆஞ்சநேயர் சிலை உள்ளது.

இந்த ஆஞ்சநேயருக்கு ஆண்டுதோறும் மார்கழி மாதம் மூலம் நட்சத்திரத்தில் ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். மேலும் மாதம் தோறும் மூலம் நட்சத்திரத்தன்று ஆஞ்சநேயருக்கு வெள்ளி அங்கி சார்த்தி சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம். அதே போல் நேற்று மூலம் நட்சத்திரத்தையொட்டி 18 அடி உயர ஆஞ்சநேயருக்கு வெள்ளி அங்கி சார்த்தி சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் நேற்று பிரதோஷம் என்பதால் மாலை 6:30 மணிக்கு தாணுமாலய சாமிக்கு தங்க அங்கி சாத்தி, பூஜைகள் முடிந்த பின்னர் ரிஷப வாகனத்தில் சிவனும், கருட வாகனத்தில் பெருமாளும் இருக்கும்படி அமரச் செய்து கோவிலை மூன்று முறை சுற்றி வந்து, ஸ்ரீ பலியும் நடந்தது. இதிலும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை திருக்கோவில் நிர்வாகத்தினரும், தாணுமாலய தொண்டர் அறக்கட்டளையினரும் இணைந்து செய்திருந்தனர்.

Tags:    

Similar News