வழிபாடு

பாலவிளை புனித சவேரியார் ஆலயம் அர்ச்சிப்பு விழா

Update: 2022-08-07 05:44 GMT
  • அர்ச்சிப்பு விழாவில் ஆயிரக்கணக்கான பங்கு மக்கள் கலந்துகொண்டனர்.
  • பங்கு மக்களிடம் காணிக்கை பொருட்கள் பெறும் நிகழ்ச்சியும் நடந்தது.

பாலவிளையில் புனித சவேரியார் மலங்கரை கத்தோலிக்க புது ஆலய அர்ச்சிப்பு விழா நேற்று நடந்தது.

இதில் மார்த்தாண்டம் மறை மாவட்ட ஆயர் வின்சென்ட் மார் பவுலோஸ், திருவனந்தபுரம் உயர் மறை மாநில துணை ஆயர் மாத்யூஸ் மார் போளிகார்ப்பஸ், கூரியா ஆயர் ஆன்றணி மார் சில்வானோஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஆலயத்தை ஆயர் வின்சென்ட் மார் பவுலோஸ் திறந்து வைத்தார். பங்குதந்தை அலெக்ஸ் குமார் அனைவரையும் வரவேற்றார்.

அதன்பிறகு ஆசியுரை வழங்கும் நிகழ்ச்சியும், பங்கு மக்களிடம் காணிக்கை பொருட்கள் பெறும் நிகழ்ச்சியும் நடந்தது. அதைத்தொடர்ந்து பலி பீடத்தில் வைக்கப்படும் நறுமண பெட்டியையும், ஆலய பீடத்தையும், பலி பீடத்தையும் ஆயர் வின்சென்ட் மார் பவுலோஸ் அர்ச்சித்து, வேண்டுதல் ஜெபம் செய்தார்.

அதன்பிறகு ஆயர்கள் ஆன்றணி மார் சில்வானோஸ், மாத்யூஸ் மார் போளிகார்ப்பஸ் ஆலயத்தின் இரு பக்கவாட்டிலும் அர்ச்சிப்பு செய்தார்கள். அதைத்தொடர்ந்து ஆயர்கள் அருளுரையாற்றினார்கள் அதை தொடர்ந்து அன்பின் விருந்து நடைபெற்றது. அர்ச்சிப்பு விழாவில் ஆயிரக்கணக்கான பங்கு மக்கள் கலந்துகொண்டனர்.

முன்னதாக ஆயர்களுக்கு பங்குத்தந்தை அலெக்ஸ் குமார் தலைமையில் பங்கு செயலாளர் ஜெபல்சிங், பொருளாளர் அசோக் ராஜா, கட்டுமான பணிக்குழு ஒருங்கிணைப்பாளர் இவான்ஸ் ஆகியோர் முன்னிலையில், பெண்கள் முத்துக்குடை அணிவகுக்க, மேள தாளம் முழங்க, பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.

Tags:    

Similar News