வழிபாடு
null

ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் மற்றும் பஞ்சாங்கம்

Published On 2022-08-07 01:28 GMT   |   Update On 2022-08-07 01:31 GMT
  • கோவில்களில் இன்று பவித்ரோற்சவம் நடக்கிறது.
  • திருவல்லிக்கேணி ஆஞ்சநேயருக்கு இன்று சிறப்பு திருமஞ்சனம்

கோவில்களில் இன்று பவித்ரோற்சவம்

பெருமாளுக்கு பூஜைகள், திருமஞ்சனம், ஆராதனை போன்றவை நடத்தப்படும் போதும் மற்ற திருவிழா காலங்களிலும் குறைபாடுகள் ஏற்படக்கூடும். அதனால் பெருமாளின் சக்தியும் குறைய வாய்ப்பு உண்டு. அவ்வாறு ஏற்படும் குறைகளை போக்க பவித்ரோற்சவம் கொண்டாடப்படுகிறது. மேலும் பூஜை செய்யும்போது சில சமயம் மந்திர உச்சரிப்புகளில் தவறு நேரிடலாம். இதனால் ஏற்படும் தோஷங்களையும் பவித்ரோற்சவம் மூலம் தீர்க்க முடியும். இன்று (7-ந்தேதி) முக்கிய வைணவத் தலங்களில் பவித்ரோற்சவம் கொண்டாடப்படுகிறது. இந்த உற்சவத்தில் உற்சவர், மூலவருக்கு சேர்த்தே விசேஷமான பவித்ர மாலைகள் அணிவிக்கப்படும். இந்த பவித்ரோற்சவத்தை பார்த்தால் பரம புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

திருவல்லிக்கேணி ஆஞ்சநேயருக்கு இன்று சிறப்பு திருமஞ்சனம்

சூரியனார் கோவில் ஸ்ரீ சூரியநாராயணருக்கு சிறப்பு திருமஞ்சனம். திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் ராஜாங்க சேவை, வடமதுரை ஸ்ரீ சவுந்திரராஜர் சேஷ்ட வாகனத்தில் திருவீதி உலா. மதுரை மீனாட்சியம்மன் சட்டத்தேர், இரவு புஷ்பக வாகனத்தில் பவனி. சேலம் செவ்வாய்ப்பேட்டை மாரியம்மன் பவனி. கோட்புலி நாயனார் குருபூஜை. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள அனுமனுக்கும், திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவில் திருக்குளக்கரையில் உள்ள ஆஞ்சநேயருக்கும் சிறப்பு திருமஞ்சனம்.

இன்றைய பஞ்சாங்கம்

சுபகிருது ஆண்டு, ஆடி-22 (ஞாயிற்றுக்கிழமை)

பிறை : வளர்பிறை.

திதி : தசமி இரவு 7.55 மணி வரை

நட்சத்திரம் : அனுஷம் நண்பகல் 1.22 வரை பிறகு கேட்டை

யோகம் : மரணயோகம்

ராகுகாலம் : மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை

எமகண்டம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை

இன்றைய ராசிபலன்

மேஷம்-ஆர்வம்

ரிஷபம்-சாந்தம்

மிதுனம்-நன்மை

கடகம்-சுகம்

சிம்மம்-வெற்றி

கன்னி-நன்மை

துலாம்- ஆர்வம்

விருச்சிகம்-ஓய்வு

தனுசு- மேன்மை

மகரம்-பரிசு

கும்பம்-ஆதரவு

மீனம்-நற்செயல்

Tags:    

Similar News