வழிபாடு

கேசவன்புத்தன் துறைதூய மாசற்ற திருஇருதய அன்னை ஆலய தங்கத்தேர் திருவிழா நாளை தொடங்குகிறது

Published On 2022-08-18 05:44 GMT   |   Update On 2022-08-18 05:44 GMT
  • இந்த திருவிழா நாளை தொடங்கி 28-ந்தேதி வரை நடக்கிறது.
  • 28-ந்தேதி பகல் 11 மணிக்கு தங்கத்தேர் பவனி நடக்கிறது.

ஈத்தாமொழி அருகே உள்ள கேசவன்புத்தன்துறை தூய மாசற்ற திருஇருதய அன்னை ஆலய தங்கத்தேர் திருவிழா நாளை(வெள்ளிக்கிழமை) தொடங்கி 28-ந்தேதி வரை நடக்கிறது.

விழாவில் நாளை காலை 6 மணிக்கு சிறப்பு கொடி அர்ச்சிப்பு, திருப்பலி, செபமாலை நடக்கிறது. மாலை 6 மணியில் இருந்து 6.30 மணிக்குள் கோட்டார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமை தாங்கி திருவிழா கொடியேற்றி வைத்து திருப்பலி நிறைவேற்றுகிறார்.

விழா நாட்களில் தினமும் மாலை 6.30 மணிக்கு செபமாலை, புகழ்மாலை, நற்கருணை ஆசீர் ஆகியவை நடக்கிறது.

9-ம்நாள் விழாவில் காலை 6 மணிக்கு ராஜாவூர் பங்குதந்தை ஸ்டான்லி சகாயம் தலைமையில் நோயாளிகளுக்கான சிறப்பு திருப்பலி நடக்கிறது. வடசேரி பங்குதந்தை புரூநோ அருள் உரையாற்றுகிறார். மாலை 6:30 மணிக்கு நடைபெறும் மாலை ஆராதனைக்கு கோட்டார் மறை மாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமை தாங்கி உரையாற்றுகிறார்.

விழாவின் 10-ம் நாளான 28-ந்தேதி அதிகாலை காலை 5.30 மணிக்கு தேர் திருப்பலி, காலை 6 மணிக்கு ஆடம்பர கூட்டுத்திருப்பலி நடக்கிறது. திருப்பலிக்கு கோட்டாறு மறை மாவட்ட முதன்மை அருட்பணையாளர் கிளாரியூஸ் தலைமை தாங்குகிறார். புனித ஜோசப் மெட்ரிகுலேஷன் பள்ளி தாளாளர் மரிய கிளாட்சன் அருளுரையாற்றுகிறார்.

பகல் 11 மணிக்கு தங்கத்தேர் பவனி நடக்கிறது. அதைதொடர்ந்து அன்பின் விருந்து, மாலை 6 மணிக்கு கொடியிறக்கம் ஆகியவை நடக்கிறது.

விழா ஏற்பாடுகளை பங்கு மக்கள், பங்கு அருட்பணி பேரவை, மற்றும் பங்கு தந்தையர்கள் செய்து வருகிறார்கள்.

Tags:    

Similar News