வழிபாடு

திருநகரி கல்யாண ரங்கநாத பெருமாள் கோவிலில் திருக்கார்த்திகை திருவிழா தொடங்கியது

Published On 2022-12-01 06:22 GMT   |   Update On 2022-12-01 06:22 GMT
  • 6-ந்தேதி தங்க குதிரை வாகனத்தில் பெருமாள் எழுந்தருளும் காட்சி நடக்கிறது.
  • 7-ந்தேதி காலை தேரோட்டம் நடக்கிறது.

திருவெண்காடு அருகே திருநகரி கிராமத்தில் பிரசித்தி பெற்ற கல்யாண ரங்கநாத பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவில் 108 வைணவ திவ்ய தேச கோவில்களில் ஒன்றாகும். பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் திருக்கார்த்திகை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து கோவில் கொடி மரத்திற்கு பல்வேறு மங்களப்பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு மாலை அணிவிக்கப்பட்டது.

பின்னர் தீபாராதனை காட்டப்பட்டு, கல்யாண ரங்கநாத பெருமாள் மற்றும் திருமங்கை ஆழ்வார் முன்னிலையில் கொடியேற்றம் நடந்தது. இதில் கோவில் நிர்வாக அதிகாரி அன்பரசன், விழா குழு செயலாளர் ரகுநாதன், ஊராட்சி மன்ற தலைவர் சுந்தர்ராஜன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழாவில் முக்கிய நிகழ்ச்சியாக கருட சேவை வருகிற 2-ந்தேதி காலை 10 மணிக்கும், 6-ந்தேதி தங்க குதிரை வாகனத்தில் பெருமாள் எழுந்தருளும் காட்சியும், 7-ந்தேதி காலை தேரோட்டமும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News