வழிபாடு

தேவசகாயம் மவுண்ட் புனித லூர்து அன்னை கெபி அர்ச்சிப்பு விழா நாளை நடக்கிறது

Update: 2022-08-13 07:20 GMT
  • அர்ச்சிப்பு விழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6.30 மணிக்கு நடக்கிறது.
  • பழமையான இந்த கெபி புதுப்பிக்கப்பட்டுள்ளது.

ஆரல்வாய்மொழி தேவசகாயம் மவுண்டில் புனித வியாகுல அன்னை ஆலயம், மறைசாட்சி புனிதர் தேவசகாயம் ஆலயம் என இரட்டை திருத்தலம் உள்ளது. அதோடு இங்கு புனித லூர்து அன்னை கெபியும் இருந்தது.

பழமையான இந்த கெபி புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதன் அர்ச்சிப்பு விழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6.30 மணிக்கு நடக்கிறது. விழாவில் கோட்டார் மறைமாவட்ட அருட்பணியாளர்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொள்கிறார்கள்.

இரவு அன்பின் விருந்து நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை திருத்தல அதிபர் பிரான்சிஸ் சேவியர், பங்குதந்தை பிரைட், இணைபங்கு தந்தை ரெட்வின் மற்றும் பங்கு அருட்பணி பேரவையினர், அருட்சகோதரிகள், பங்குமக்கள் செய்து வருகிறார்கள்.

Tags:    

Similar News