வழிபாடு

கார்த்திகை தீபத்திருநாள் அன்று மருதமலை மலை கோவிலுக்கு வாகனங்களில் செல்ல தடை

Update: 2022-12-01 08:22 GMT
  • 6-ந்தேதி கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது.
  • 6-ந்தேதி தீபத்திருவிழாவையொட்டி கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருவார்கள்.

கோவையில் பிரசித்தி பெற்ற மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் முருகப்பெருமானின் 7-வது படைவீடாக பக்தர்களால் போற்றப்படுகிறது. இங்கு பண்டிகை காலங்களில் ஏராளமான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து செல்வார்கள். இந்த நிலையில் மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில் வருகிற 6-ந்தேதி கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது. இதனால் அன்றைய தினம் மலை அடிவாரத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு வாகனங்களில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக கோவில் துணை ஆணையர் ஹர்ஷினி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

வருகிற 6-ந்தேதி தீபத்திருவிழாவையொட்டி கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருவார்கள். இதனால் மலை கோவிலுக்கு வாகனங்களில் செல்வதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே அன்றைய தினம் காலை 6 முதல் மாலை 7 மணி வரை, அடிவாரத்தில் இருந்து மலைகோவிலுக்கு இருசக்கர மற்றும் 4 சக்கர வாகனங்களில் செல்ல அனுமதி இல்லை. கோவில் அடிவாரத்தில் இருந்து தேவஸ்தான பஸ்கள் வாயிலாக, பக்தர்கள் மலைக்கு மேல் உள்ள கோவிலுக்கு சென்று தீபம் ஏற்றும் விழாவை காணலாம். மறுநாள் வழக்கம் போல் வாகனங்களில் மலைக்கு செல்லலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News