வழிபாடு

குங்கும காளியம்மன் கோவில் ஆனித்திருவிழா தேரோட்டம்

Published On 2022-06-29 04:14 GMT   |   Update On 2022-06-29 04:14 GMT
  • கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக இந்த விழா நடக்கவில்லை.
  • தேரோடும் வீதியில் ஆங்காங்கே தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது.

தேவகோட்டை அருகே உள்ளது கண்டதேவி. இங்கு சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானத்திற்கு உட்பட்ட குங்கும காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆனித்திருவிழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக இந்த விழா நடக்கவில்லை. இந்நிலையில் இந்தாண்டிற்கான விழா கடந்த 20-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்று வந்தது.

9-ம் திருநாளான நேற்று மாலை தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக அலங்கரிக்கப்பட்ட தேரில் குங்கும காளியம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. அதன் பின்னர் மாலை 4.45 மணிக்கு அதிர்வேட்டுக்கள் முழங்க தேர் இழுக்கப்பட்டு ரத வீதிகள் வழியாக வலம் வந்தது. தேரை ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.

மாலை 6.46 மணிக்கு தேர் நிலையை வந்தடைந்தது. முன்னதாக தேரோடும் வீதியில் ஆங்காங்கே தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது. சிவகங்கை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சீமைச்சாமி மேற்பார்வையில் போலீஸ் சூப்பிரண்டுகள் ரமேஷ்(தேவகோட்டை), ஆத்மநாபன் (திருப்பத்தூர்) ஆகியோர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News