வழிபாடு

அமாவாசை அன்று காகத்திற்கு வைக்கும் உணவை காகம் மட்டும்தான் சாப்பிட வேண்டுமா?

Published On 2022-06-29 08:46 GMT   |   Update On 2022-06-29 08:46 GMT
  • தினமும் அல்லது அமாவாசை அன்று நாம் காகத்திற்கு உணவு படைக்கிறோம்.
  • காகத்தின் உருவில், நம் முன்னோர்கள் வந்து உணவருந்துவதாக ஒரு நம்பிக்கை.

அமாவாசை தினத்தில் காகத்திற்கு வைக்கும் உணவை, காகம் மட்டும்தான் சாப்பிட வேண்டுமா? பிற உயிரினங்கள் சாப்பிட்டால் தவறா? என்ற சந்தேகத்தை பற்றி தெரிந்து கொள்வோம்.

தினமும் உணவு சமைத்ததும் அதில் சிறிதளவை எடுத்து காகத்திற்கு வைத்துவிட்டு, அதன்பின் உணவருந்துபவர்கள் பலர் இருக்கிறார்கள். குறைந்த பட்சம், அமாவாசை தினத்திலாவது, காகத்திற்கு சாதம் வைத்தபிறகு உணவருந்தும் பழக்கம் நம்மில் பலருக்கும் இருக்கிறது. சரி.. அப்படி காகத்திற்கு வைக்கும் உணவை, காகம் மட்டும்தான் சாப்பிட வேண்டுமா? பிற உயிரினங்கள் சாப்பிட்டால் தவறா? என்ற சந்தேகம் எழலாம்.

காகத்தின் உருவில், நம் முன்னோர்கள் வந்து உணவருந்துவதாக ஒரு நம்பிக்கை. அந்த வகையில்தான் நாம் காகத்திற்கு உணவு படைக்கிறோம். அப்போது, அணில், குருவி போன்ற மற்ற உயிரினங்களும் உணவை பங்கிட்டுக்கொள்வதை நாம் தவிர்க்க முடியாது, தடுக்க முடியாது.

கடவுள் படைப்பில் எல்லா உயிர்களும் சமம். அப்படிப் பார்த்தால், எந்த உயிர்கள் உணவருந்தினாலும் புண்ணியம் கிடைக்கும். ஏன்? இயலாதவர்களாக இருக்கும் மனிதர்களுக்கும் கூட நாம் அன்னத்தை அளித்தால், அது பெரும் புண்ணியம்தானே.

Tags:    

Similar News