வழிபாடு

முகமது சதக் அறக்கட்டளை சார்பில் நபிகள் நாயகம் மவுலீது ஆலிம்கள், இமாம்கள் ஓதினர்

Published On 2022-09-29 05:57 GMT   |   Update On 2022-09-29 05:57 GMT
  • 1-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை முகமது நபியின் புகழ்பாடும் மவுலீது ஓதப்பட்டு வருகிறது.
  • கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த மவுலீது நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

கீழக்கரையில் முகமது சதக் அறக்கட்டளை குடும்பத்தினர் சார்பில் நபிகள் நாயகம் பிறந்த நாளையொட்டி சதக் அவென்யூ வளாகத்தில் உள்ள மஜ்லிஸில் ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமிய மாதமான ரபியுல்அவ்வல் 1-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை முகமது நபியின் புகழ்பாடும் மவுலீது ஓதப்பட்டு வருகிறது.

கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த மவுலீது நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று முன்தினம் இரவு மவுலீது நிகழ்ச்சி தொடங்கியது. முகமது சதக் அறக்கட்டளை தலைவர் யூசுப்சாகிப் தலைமையில், இயக்குனர்கள் ஹாமீது இபுராஹிம், ஹபீப் முகமது சதக்கத்துல்லா, முகமது அஸ்லம், முகமது சதக் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. மாவட்ட அரசு காஜி சலாஹுதீன், கீழக்கரை டவுன் கத்தீப் காதர்பக்ஸ் உசேன் ஆகியோர் உள்பட கீழக்கரை மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளை சேர்ந்த ஆலிம்கள், உலமாக்கள், இமாம்கள் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று மவுலீது ஓதினர்.

கீழக்கரை செய்யது ஹமீதா மற்றும் அரூஸியா தைக்கா உள்ளிட்ட அரபிக்கல்லூரி ஆலிம், உலமா மாணவர்களும் கலந்து கொண்டு மவுலீது ஓதினர். கீழக்கரை உஸ்வதுன் ஹசனா முஸ்லிம் சங்கம் உள்பட அனைத்து ஜமாத் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். மவுலீது நிகழ்ச்சியை யொட்டி தினந்தோறும் இரவு உணவு வழங்கப்படுகிறது. 12-ம் நாள் மவுலீதின்போது ஆயிரக்கணக்கானோருக்கு நெய்சோறு அன்னதானமும், கீழக்கரை முகமது சதக் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் மீலாது நபி விழாவும் நடைபெற உள்ளதாக அறக்கட்டளை தலைவர் யூசுப்சாகிப் தெரிவித்தார்.

Tags:    

Similar News