வழிபாடு

கல்லுவிளை பகவதி அம்மன் கோவிலில் ஆடி செவ்வாய் பொங்கல் வழிபாடு நாளை நடக்கிறது

Published On 2022-08-15 07:57 GMT   |   Update On 2022-08-15 07:57 GMT
  • நாளை இரவு 8 மணிக்கு புஷ்பாபிஷேகம் நடக்கிறது.
  • வருகிற 19-ந்தேதி மகா சண்டிகா ஹோமம் நடக்கிறது.

தக்கலை அருகே உள்ள கல்லுவிளையில் அமைந்துள்ள பகவதி அம்மன் கோவிலில் 36-வது ஆண்டு ஆடி செவ்வாய் பொங்கல் வழிபாடு, திருவிளக்குபூஜை, புஷ்பாபிஷேகம் என முப்பெரும் விழா நேற்று தொடங்கி நாளை(செவ்வாய்க்கிழமை) வரை 3 நாட்கள் நடக்கிறது. விழாவில் நேற்று காலையில் கணபதி ஹோமம், சிறப்பு பூஜை, தீபாராதனை, அணையா தீபம் ஏற்றுதல், திருவிளக்குபூஜை ஆகியவை நடந்தது.

விழாவில் இன்று (திங்கட்கிழமை) காலையில் சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனை,திருவாசகம், தேவி மகாத்மியம் முற்றோதல், இரவு பஜனை, சிறப்பு பூஜை நடக்கிறது.

நாளை காலை அபிஷேகம், சிறப்பு பூஜை, மருத்ஞ்சய ஹோமம், நவகலச பூஜை, 10 மணிக்கு நேர்ச்சை பொங்கல் வழிபாடு, மாலை பஜனை, இரவு 8 மணிக்கு புஷ்பாபிஷேகம், மகா தீபாராதனை ஆகியவை நடக்கிறது. வருகிற 19-ந்தேதி காலை 7 மணி முதல் 12.30 மணி வரை உலக நன்மை வேண்டி மகா சண்டிகா ஹோமம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் மேல்சாந்தி கழுகறை சதீஸ் போற்றி தலைமையில் விழாக்குழுவினர் செய்து வருகிறார்கள்.

Tags:    

Similar News