வழிபாடு

ஆனி அமாவாசை: அக்னிதீர்த்த கடலில் புனித நீராடிய பக்தர்கள்

Published On 2022-06-28 05:25 GMT   |   Update On 2022-06-28 05:25 GMT
  • அமாவாசை அன்று அக்னி தீர்த்த கடலில் நீராடி முன்னோர்களுக்கு திதி கொடுப்பது சிறப்பானதாக கருதப்படுகிறது.
  • பக்தர்கள் 22 தீர்த்தங்களில் நீராடி சாமி தரிசனம் செய்தனர்.

இந்துக்களின் புனித ஸ்தலமான ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் அமாவாசை நாட்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வார்கள். குறிப்பாக அன்றைய நாட்களில் அக்னி தீர்த்த கடலில் நீராடி முன்னோர்களுக்கு திதி கொடுப்பது சிறப்பானதாக கருதப்படுகிறது.

வருடத்தில் ஆடி, தை, மகாளய அமாவாசை நாட்களில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் அதிகம் வருவார்கள்.

ஆனி அமாவாசையை முன்னிட்டு ராமேசுவரத்தில் இன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். அவர்கள் அக்னி தீர்த்தக்கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். பின்னர் அவர்கள் கோவிலில் உள்ள 22 தீர்த்தங்களில் நீராடி சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News