வழிபாடு

அச்சன்கோவிலில் யானை மீது ஐயப்பன் விக்ரகம் ஊர்வலமாக எடுத்து வந்த காட்சி.

அச்சன்கோவில் ஐயப்பனுக்கு 2 டன் மலர்களால் புஷ்பாஞ்சலி

Published On 2023-01-28 07:07 GMT   |   Update On 2023-01-28 07:07 GMT
  • புஷ்பாஞ்சலியையொட்டி ஐயப்பனுக்கு கலசாபிஷேகம் நடந்தது.
  • யானை மீது ஐயப்பனின் விக்ரகம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.

கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் அருகில் உள்ள அச்சன்கோவில் ஐயப்பனையும் தரிசித்த பின்னரே வீடு திரும்புவார்கள்.

அச்சன் கோவில் ஐயப்பனுக்கு தை மாதம் ரேவதி நட்சத்திரத்தில் புஷ்பாஞ்சலி வழிபாடு நடத்தப்படும். இந்த ஆண்டுக்கான புஷ்பாஞ்சலி நேற்று நடந்தது.

இதில் கேரளா மட்டுமின்றி தமிழகத்தின் தென்காசி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

புஷ்பாஞ்சலியையொட்டி ஐயப்பனுக்கு கலசாபிஷேகம் நடந்தது. பின்னர் யானை மீது ஐயப்பனின் விக்ரகம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.

தொடர்ந்து கோவில் முழுவதும் தீபங்கள் ஏற்றி வழிபாடு நடந்தது. இதையடுத்து ஐயப்பனுக்கு 2 டன் மலர்களால் புஷ்பாஞ்சலி வழிபாடு நடைபெற்றது.

அப்போது கோவிலில் திரண்டிருந்த பக்தர்கள் சரண கோஷம் எழுப்பி அய்யப்பனை தரிசித்தனர்.

Similar News