வழிபாடு
நித்ய கல்யாணி அம்மன் கோவிலில் திருவாசகம் முற்றோதுதல்

நித்ய கல்யாணி அம்மன் கோவிலில் திருவாசகம் முற்றோதுதல்

Update: 2022-05-21 06:17 GMT
செங்கோட்டை நித்ய கல்யாணி அம்மன் கோவிலில் வீரகேரளவிநாயகா் மற்றும் முருகனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் தீபாராதனை நடந்தது.
செங்கோட்டை நித்ய கல்யாணி அம்மன் கோவில் வளாகத்தில் உலக நன்மை வேண்டி பொதிகை ருத்ரா திருவாசக கமிட்டி சார்பில் திருவாசகம் முற்றோதுதல் மற்றும் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. செங்கோட்டை அரசு மருத்துவமனை சித்த மருத்துவா் டாக்டா் கலா தலைமை தாங்கினார்.

அரசு ஆயுர்வேத மருத்துவமனை டாக்டா் ஹரிஹரன், சித்த மருத்துவா் சிந்து ஆகியோர் முன்னிலை வகித்தனா். தேசிய இந்து திருக்கோவில் கூட்டமைப்பின் தென்காசி மாவட்ட செயலாளா் ராம்நாத் வரவேற்று பேசினார். தொடர்ந்து கோவிலில் வீரகேரளவிநாயகா் மற்றும் முருகனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் தீபாராதனை நடந்தது.

தொடா்ந்து உலக நன்மை வேண்டியும், கொரோனா தொற்று பரவாமல் இருக்க வேண்டியும் சிவபகவதி குழுவினா் திருவாசகம் முற்றோதுதல் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனா்.
Tags:    

Similar News