வழிபாடு
வீரநரசிம்மபெருமாளுக்கு புஷ்பஅலங்காரம்

வீரநரசிம்ம பெருமாளுக்கு புஷ்ப அலங்காரம்

Published On 2022-05-16 08:01 GMT   |   Update On 2022-05-16 08:01 GMT
தஞ்சை வெண்ணாற்றங்கரையில் உள்ள மாமணிகோவிலில் நரசிம்ம மூலவர் வீரநரசிம்மபெருமாளுக்கு சிறப்பு புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
தஞ்சை வெண்ணாற்றங்கரையில் உள்ள மாமணிகோவில் 108 வைணவ தலங்களில் 20-வது தலமாக விளங்குகிறது. வீரநரசிம்மபெருமாள் கோவில், நீலமேகப்பெருமாள் கோவில், மணிக்குன்ற பெருமாள் கோவில் என 3 கோவில்களும் சேர்ந்தது தான் 108 வைணவ தலம் வரிசையில் 20-வது தலமாக விளங்குகிறது. பொதுவாக நரசிம்மர் தனித்து இருப்பார்.

வீரநரசிம்மபெருமாள் கோவிலில் மட்டுமே கருவறையில் வீரநரசிம்மர் ஸ்ரீதேவி, பூதேவியுடன் காட்சி தருகிறார். மூலவருக்கு தைலக்காப்பு மட்டுமே செய்யப்படுகிறது. இங்கு உற்சவருக்கு மட்டுமே திருமஞ்சனம் நடைபெறும். இது பஞ்ச நரசிம்ம தலமாகவும் திகழ்கிறது. ஒவ்வொரு பிரதோஷ காலத்தில் வீரநரசிம்மபெருமாளை தரிசனம் செய்து வந்தால் எண்ணியவை எண்ணியபடி நடைபெறும் என்பது ஐதீகம்.

சுவாதி நட்சத்திரத்தில் வீரநரசிம்மபெருமாளை தரிசனம் செய்வது சிறப்பாகும். இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த கோவிலில் நரசிம்ம ஜெயந்தி விழாவையொட்டி மூலவர் வீரநரசிம்மபெருமாளுக்கு சிறப்பு புஷ்ப அலங்காரம் நேற்று செய்யப்பட்டு, சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News