வழிபாடு
தாராபிஷேகம்

கத்திரி வெயிலின் தாக்கத்தை குறைக்க கரபுரநாதருக்கு மூலிகை அபிஷேகம்

Published On 2022-04-29 05:52 GMT   |   Update On 2022-04-29 05:52 GMT
கத்திரி வெயிலின் தாக்கத்தை குறைக்க சேலம், உத்தமசோழபுரத்தில் அமைந்துள்ள கரபுரநாதர் சாமிக்கு தாராபாத்திரத்தில் மூலிகை அபிஷேகம் நடந்தது.
தமிழகத்தில் ஆண்டு தோறும் கோடை காலத்தில் வரும் அக்னி நட்சத்திர நாட்களில் வெயில் கொடுமையினால் மிகவும் கடுமையான பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

அக்னி நட்சத்திர நாட்களை முன்னிட்டு சேலம், உத்தமசோழபுரத்தில் அமைந்துள்ள கரபுரநாதர் சாமிக்கு தாராபாத்திரத்தில் அபிஷேகம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு கோடை வெயிலின் தாக்கம் இந்த ஆண்டு வழக்கத்தை விட முன்னதாகவே பொது மக்களை சுட்டு எரித்து வருகிறது.

இதன் காரணமாக அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்னதாக சேலம் உத்தமசோழபுரத்தில் அமைந்துள்ள கரபுர நாதர் கோவிலில் எழுந்தருளியிருக்கும் மூலவர் சிவலிங்கத்தின் மேல் தாராபாத்திரம் அமைக்கப்பட்டு, அதில் பன்னீர், வெட்டிவேர், விளாமிசிவேர், ஏலக்காய், சாதிக்காய், பச்சைக்கற்பூரம் மற்றும் பலவிதமான மூலிகைகளைக் கலந்து வைத்து, இடைவிடாமல் சாமி மீது சொட்டு சொட்டாக நீர் விழும்படி அமைக்கப்ட்டு அபிஷேகம் நடத்தி சாமியை குளிர்விக்கும் படி அமைத்துள்ளனர்.

இப்படி இடைவிடாமல் அபிஷேகம் செய்யும்போது உலகம் முழுவதும் நல்ல மழை பெய்து, நீர்நிலைகள் நிரம்பி அக்னி வெயிலின் தாக்கம் குறைந்து செழிப்பாக நாடு வளரும் என்பதை பக்தர்கள் நம்பிக்கையாக கருதப்படுகின்றது.

தினசரி நடைபெறும் இந்த அபிஷேகத்திற்கு தேவையான பொருட்களை பக்தர்கள் கொண்டு வந்து கொடுக்கலாம் என கோவில் சிவாச்சாரியார்கள் தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News