வழிபாடு
இந்திரன்

இந்திரனின் தம்பி உபேந்திரன்

Published On 2022-04-28 08:52 GMT   |   Update On 2022-04-28 08:52 GMT
இந்திரனை பெற்றெடுத்த அதிதியின் வயிற்றில் பிறந்த காரணத்தால், வாமனருக்கு ‘உபேந்திரன்’ என்ற பெயரும் உண்டு. இதற்கு ‘இந்திரனுக்கு பின் வந்தவன்’ என்று பொருள்.
பிரம்ம தேவரின் மானசீக புத்திரர்களில் ஒருவராக இருந்து, மனித உயிர்கள் பல்கிப் பெருக வழி செய்தவர்களில் ஒருவர் காசியபர். இவரும் இவரது மனைவி அதிதியும், தேவர்கள் பலரையும் பிள்ளைகளாகப் பெற்றவர்கள். காசியபர், அசுர குல பெண்களுடன் இணைந்து, அசுர குலம் வளரவும் காரணமாக இருந்தவர்.

காசியபரும், அதிதியும் மகாவிஷ்ணுவை தங்களின் பிள்ளையாகப் பெற விரும்பினர். இதற்காக தவம் இயற்றினர். அவர் களின் கோரிக்கையை நிறைவேற்ற நினைத்த மகாவிஷ்ணு, தன்னுடைய ஐந்தாவது அவதாரமான வாமன அவதாரத்தின் போது, காசியபர்- அதிதி தம்பதியருக்கு பிள்ளையாகப் பிறந்தார்.

ஆவணி வளர்பிறை துவாதசியும், திருவோண நட்சத்திரமும் இணையும் நாளில் வாமனர் அவதரித்தார். வாமனரை கண்ட அதிதி தேவி, ‘சிரவண மங்களா’ என்று போற்றி மகிழ்ந்தாள். இதற்கு ‘ஓண நாளில் மங்களமாக வந்தவனே’ என்று பொருள். இதற்கு முன்பு, தேவர்களின் தலைவனான இந்திரனை பெற்றெடுத்த அதிதியின் வயிற்றில் பிறந்த காரணத்தால், வாமனருக்கு ‘உபேந்திரன்’ என்ற பெயரும் உண்டு. இதற்கு ‘இந்திரனுக்கு பின் வந்தவன்’ என்று பொருள்.
Tags:    

Similar News