வழிபாடு
திருப்பரங்குன்றம் கோவில் பெரிய தேரில் பொருத்துவதற்கு தயாராக உள்ள அச்சு மற்றும் உள்சக்கரங்கள்.

திருப்பரங்குன்றம் கோவில் பெரிய தேருக்கு 2 புதிய உள்சக்கரங்கள்

Update: 2022-03-29 07:06 GMT
திருப்பரங்குன்றம் கோவில் தேரின் பெரிய சக்கரத்தின் உள்புறத்தில் சிறிய உள் சக்கரங்கள் பொருத்தப்பட உள்ளன. இதற்கான பணி ஒருசில நாளில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு கலை நுணுக்கத்துடன் கூடிய எண்ணற்ற அழகிய சிற்பங்கள் கொண்ட ஒரு பெரிய தேர் உள்ளது. கோவில் வாசல் முன்பு நிலை நிறுத்தப்பட்டுள்ள இந்த தேர் சுமார்40 டன் எடை கொண்டதாகும். ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதத்தில் நடைபெறக்கூடிய பங்குனி பெருவிழாவின்14-வது நாள் இந்த ேதர் பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்து கிரிவலம்வருவது நடந்துவருகிறது. தேர் உருவாக்கப்பட்ட காலத்தில் மரத்திலான சக்கரங்கள் பொருத்தப்பட்டது. இந்த நிலையில் பல ஆண்டுகளுக்கு முன்பு மரத்திலான சக்கரங்கள் அகற்றப்பட்டு புதியதாக இரும்பிலான பெரிய சக்கரங்கள் பொருத்தப்பட்டது.

இதற்கிடையே கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அதிநவீனமாக தேருக்கு ஹைட்ராலிக் பிரேக் பொருத்தப்பட்டு தேரோட்டம் நடந்தது. இதற்கிடையே மிகுந்த பாதுகாப்புடன் ஒரே சீராக தேர்வலம் வருவதற்கு வசதியாக சக்கரங்கள் பொருத்த கோவில் நிர்வாகம் முடிவு செய்தது.

அதன்படி திருச்சி பெல் நிறுவனத்தில் மூலம் கோவில் நிதியில் இருந்து ரூ.3.40 லட்சத்தில் இரும்பிலான ஒரு அச்சுடன் 3 டன் எடை கொண்ட 2 உள் சக்கரங்கள் தயார்படுத்தப்பட்டது.

இதற்கிடையே திருச்சியில் இருந்து திருப்பரங்குன்றத்திற்கு கடந்த 2 வாரத்திற்கு முன்பு கொண்டுவரப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளது. தேரின் பெரிய சக்கரத்தின் உள்புறத்தில் சிறிய உள் சக்கரங்கள் பொருத்தப்பட உள்ளன. இதற்கான பணி ஒருசில நாளில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News