வழிபாடு
அங்காள பரமேஸ்வரியம்மன் வீதிஉலா

அங்காள பரமேஸ்வரியம்மன் வீதிஉலா

Update: 2022-03-05 07:12 GMT
சித்தூர் சுயம்பு அங்காள பரமேஸ்வரியம்மன் கோவிலில் உற்சவர் தாயார் குறத்தி அலங்காரத்தில் எழுந்தருளி முக்கிய வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
சித்தூர் பெஸ்த வீதி குரவையநாயுடு தெருவில் உள்ள சுயம்பு அங்காள பரமேஸ்வரியம்மன் கோவிலில் மகா சிவராத்திரி விழா, மறுநாள் மயானக் கொள்ளை திருவிழா நடந்தது. அதைத்தொடர்ந்து நேற்று மாலை 6 மணியளவில் மூலவர் தாயாருக்கு சந்தன அபிஷேகம், மகா அபிஷேகம், சிறப்பு மலர் அலங்காரம், பூஜைகள் செய்து, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதன் பிறகு மகா கும்ப பாளைய உற்சவம் நடந்தது.

அதையொட்டி உற்சவர் தாயார் குறத்தி அலங்காரத்தில் எழுந்தருளி முக்கிய வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வீதிகளில் திரண்டு இருந்த ஏராளமான பக்தர்கள் தேங்காய் உடைத்தும், கற்பூரம் ஏற்றியும் அங்காள பரமேஸ்வரியம்மனை தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News