வழிபாடு
மலுமிச்சம்பட்டி ஸ்ரீ நாகசக்தி அம்மன் தியான பீடத்தில் இன்று, சத்ரு சம்கார பூஜை

மலுமிச்சம்பட்டி ஸ்ரீ நாகசக்தி அம்மன் தியான பீடத்தில் இன்று, சத்ரு சம்கார பூஜை

Published On 2022-03-02 07:04 GMT   |   Update On 2022-03-02 07:04 GMT
கோவை மலுமிச்சம்பட்டி ஸ்ரீ நாகசக்தி அம்மன் தியான பீடத்தில் இன்று (புதன்கிழமை) மாலை 6 மணிக்கு மகா சத்ரு சம்கார பூஜை நடைபெறுகிறது.
கோவை மலுமிச்சம்பட்டி ஸ்ரீ நாகசக்தி அம்மன் தியான பீடத்தில் 32 அடிஉயரத்தில் மகா கால பைரவி சிலை நிறுவப்பட்டுள்ளது. இங்கு ஒவ்வொரு மாதமும் சிறப்பாக சத்ரு சம்கார யாக பூஜை நடைபெறுகிறது. இந்த வகையில் இன்று (புதன்கிழமை) மாலை 6 மணிக்கு மகா சத்ரு சம்கார பூஜை அமாவாசை தினத்தன்று உலக நலன் வேண்டி சத்ரு சம்கார பூஜை பாபுஜி சுவாமிகள் தலைமையில் நடைபெறுகிறது.

மேலும் மகா கணபதி பூஜை, கருப்புசாமி பூஜை, சண்டி பூஜை, பிரத்தியங்கிரா பூஜை, நரசிம்மமூர்த்தி பூஜை, கால பைரவி பூஜை, நவகிரக பூஜை மற்றும் பல்வேறு பூஜைகள் நடைபெற உள்ளன.

இந்த பூஜைகளில் கலந்து கொள்வதால் தொழில் விருத்தி, குடும்ப அபிவிருத்தி மற்றும் தீய சக்திகள் நீங்கி உடல் நலமுடன் வாழ்வதற்கு பக்தர்களுக்கு எலுமிச்சை பிரசாதம் தரப்படுகிறது என்று நிர்வாகிகள் தெரிவித்தனர். விழா ஏற்பாடுகளை செயலாளர் கணேஷ்குமார், கே.பி.முருகன், நாச்சிமுத்து, தங்கதுரை மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News