வழிபாடு
மயிலாடுதுறை துலாக்கட்டத்தில் மூதாதையர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு
மாசி மகத்தையொட்டி மயிலாடுதுறை துலாக்கட்டத்தில் ஏராளமானோர் புனித நீராடி மூதாதையர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.
மாசி மகத்தன்று புண்ணிய தலங்களில் உள்ள ஆறு, கடல், குளம் போன்ற தீர்த்தங்களில் நீராடி முன்னோரை வழிபட்டால் அவர்களின் ஆசி கிடைக்கும் என்றும், அதேபோல மாசிமகத்தன்று தர்ப்பணம் செய்தால் நன்மை கிடைக்கும் என்பதும் இந்துக்களின் நம்பிக்கையாக உள்ளது.
அதன் அடிப்படையில் இந்துக்கள் புனிதமாக கருதி வரும் மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரி ஆற்றில் புனித நீராடி தர்ப்பணம் செய்தால் நன்மை கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
இந்தநிலையில் மாசிமகமான நேற்று மயிலாடுதுறை காவிரி துலாக் கட்டத்தில் ஏராளமானோர் புனித நீராடினர். பின்னர் அவர்கள் தங்களின் மூதாதையர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.
கொரோனா கட்டுப்பாடு காரணமாக வழக்கமாக தர்ப்பணம் செய்யப்படும் துலாக்கட்ட காவிரி வடக்கு கரையில் தர்ப்பணம் செய்ய அனுமதிக்கப்படவில்லை.
இதனால் காவிரியின் தென்கரையில் மட்டுமே ஏராளமானோர் தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.