கொரோனா பரவலால் 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 25-ந்தேதியில் இருந்து திருப்பதியில் பக்தர்களுக்கு நேரில் இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கும் நடைமுறை ரத்து செய்யப்பட்டது.
இதுகுறித்து திருமலை-திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கொரோனா தொற்று பரவலால் திருமலையில் தேவஸ்தான அதிகாரிகள், அர்ச்சகர்கள், பணியாளர்கள் மற்றும் பக்தர்களின் நலன் மற்றும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சாதாரணப் பக்தர்களுக்கு இலவச தரிசன டிக்ெகட்டுகள் ஆன்லைனில் வழங்கப்பட்டு வருகிறது.
கொரோனா பரவலால் 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 25-ந்தேதியில் இருந்து திருப்பதியில் பக்தர்களுக்கு நேரில் இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கும் நடைமுறை ரத்து செய்யப்பட்டது. தற்போது இலவச தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் வழங்கப்பட்டாலும், கிராமப்புறங்களில் உள்ள சாதாரணப் பக்தர்களுக்கு எந்தவொரு தரிசன டிக்கெட்டுகளும் கிடைக்கவில்லை.
எனவே திருப்பதியில் சாதாரணப் பக்தர்களின் வசதிக்காக நேரில் (ஆப் லைனில்) இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்க வேண்டும் என, பலமுறை யோசித்தாலும், கொரோனா தொற்று பரவினாலும் சாதாரணப் பக்தர்களுக்கு நேரில் இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்குவது தவிர்க்க முடியாது.
பிப்ரவரி மாதம் 15-ந்தேதிக்குள் ஒமைக்ரான் தொற்று பரவல் குறையும், என மருத்துவ நிபுணர்கள் கூறுவதால், தற்போது பிப்ரவரி மாதம் 15-ந்தேதி வரை ஆன்லைனில் தரிசன டிக்கெட்டுகளை வழங்குகிறோம். பிப்ரவரி மாதம் 15-ந்தேதிக்கு மேல் சாதாரணப் பக்தர்களுக்கு இலவச தரிசன டிக்கெட்டுகளை கவுண்ட்டர்களில் நேரில் வழங்க, பிப்ரவரி மாதம் 15-ந்தேதி ஆலோசனை நடத்தப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.