வழிபாடு
நாகூர் நாகநாதசாமி கோவில் குடமுழுக்கு

நாகூர் நாகநாதசாமி கோவில் குடமுழுக்கு

Update: 2022-01-24 05:57 GMT
நாகூர் நாகநாதசாமி கோவில் குடமுழுக்கு விழா நடந்தது. இதையொட்டி நாகநாத, நாகவல்லி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு தீபாராதனையும், இரவு பஞ்சமூர்த்திகள் வீதி உலாவும் நடந்தது.
நாகையை அடுத்த நாகூரில் நாகநாதசாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் ராகு, கேது பரிகார தலமாக விளங்கி வருகிறது. இந்த கோவில் குடமுழுக்கு விழா நேற்று காலை நடந்தது.

இதை முன்னிட்டு கடந்த 19-ந்தேதி காலை விக்னேஸ்வர பூஜையுடன், கணபதிஹோமம், நவக்கிரக ஹோமம், கோ பூஜை, தன பூஜை, தீபாராதனை நடந்தது. தொடர்ந்து வாஸ்து சாந்தி, கஜபூஜை, லட்சுமி ஹோமம், யாகசாலை பூஜைகள் நடந்தது.

பின்னர் நேற்று காலை 5 மணிக்கு 6-ம் கால யாகசாலை பூஜையுடன் மகா பூர்ணாகுதி நடந்தது. இதையடுத்து கடங்கள் புறப்பாடாகி காலை 10 மணிக்கு கோவில் விமானங்கள் மற்றும் ராஜகோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடந்தது. இதையொட்டி நாகநாத, நாகவல்லி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு தீபாராதனையும், இரவு 7 மணிக்கு பஞ்சமூர்த்திகள் வீதி உலாவும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News