வழிபாடு
பெரிய மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் தரிசனம்

பெரிய மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் தரிசனம்

Published On 2022-01-20 08:01 GMT   |   Update On 2022-01-20 08:01 GMT
ஈரோடு மாநகர் பகுதியில் பிரசித்தி பெற்ற பெரிய மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கோவில்களில் பக்தர்கள் வழிபட தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் தைப்பூச திருவிழாவையொட்டி கடந்த 18-ந் தேதி, நேற்று முன்தினம் ஆகிய நாட்களிலும் கோவில் நடை திறக்கப்படவில்லை.

இந்த நிலையில் 5 நாட்களுக்கு பின்னர் நேற்று கோவில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். இதன் காரணமாக ஈரோடு மாநகர் பகுதியில் உள்ள பல்வேறு கோவில்களில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ஈரோடு மாநகர் பகுதியில் பிரசித்தி பெற்ற பெரிய மாரியம்மன் கோவிலில் நேற்று அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். ஒரு சிலர் அகல்விளக்கு ஏற்றி அம்மனை தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News