வழிபாடு
பஞ்சவடி ஆஞ்சநேயர் கோவிலில் உற்சவர் வடை மாலை அலங்காரத்தில் அருள்பாலித்த காட்சி.

பஞ்சவடி ஆஞ்சநேயருக்கு 2 ஆயிரம் லிட்டர் பாலாபிஷேகம்

Published On 2022-01-03 05:07 GMT   |   Update On 2022-01-03 05:07 GMT
வானூர் அருகே பஞ்சவடி ஆஞ்சநேயர் கோவிலில் ஆஞ்சநேயருக்கு 2 ஆயிரம் லிட்டர் பாலாபிஷேகம் நடத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திண்டிவனம்-புதுச்சேரி நெடுஞ்சாலையில் பிரசித்திபெற்ற பஞ்சவடி விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு 36 அடி உயர ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார்.

இந்தநிலையில் பஞ்சவடி ஆஞ்சநேயர் கோவிலில் நேற்று அனுமன் ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதற்காக காலை 6 மணிக்கு சங்கல்பம் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து காலை 8 மணிக்கு 36 அடி உயர விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு 2 ஆயிரம் லிட்டர் பால், பன்னீர், சந்தனம் போன்ற மங்கள திரவியங்களால் விசேஷ அபிஷேகம் நடந்தது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

தொடர்ந்து சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது. விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 4 மணியளவில் சீதா திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. கொரோனா தொற்று பரவல் காரணமாக முக கவசம் அணிந்தவர்கள் மட்டுமே கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். மேலும் பக்தர்களுக்கு வெப்ப பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.

ஜெயந்தி விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News