புதுவை ஸ்ரீ சீரடி சாயிபாபா நகரில் உள்ள கமல சாயி ஆலயத்தில் ஆங்கில புத்தாண்டு விழா 1-ந் தேதி (சனிக்கிழமை) கோலாகலமாக நடைபெறவுள்ளது.
பகல் 11.30 மணிக்கு பாபா பல்லக்கு உற்சவமும், 12 மணிக்கு ஆரத்தியும் நடக்கிறது. மாலை 4 மணிக்கு சாயி பஜனையும், 6 மணிக்கு ஆரத்தியும் தொடர்ந்து வழிபாடும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
அரசு அறிவுறுத்தலின்படி பக்தர்கள் முக கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்தும் வழிபாடு செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடப்பட்டு உள்ளது.