வழிபாடு
அனுமன்

சிவகாசி அருகே அனுமன் ஜெயந்தி உற்சவம்

Published On 2021-12-30 06:35 GMT   |   Update On 2021-12-30 06:35 GMT
ஸ்ரீஅபயவரத ஆஞ்சநேயர் கோவிலில் ஸ்ரீ அனுமன் ஜெயந்தி உற்சவ விழாவை முன்னிட்டு வருகிற 3-ந்தேதி வரை தினமும் ஒரு அலங்காரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சிவகாசி-ஸ்ரீவில்லிபுத்தூர் ரோட்டில் ஈஞ்சார் விலக்கில் உள்ள ஸ்ரீஅபயவரத ஆஞ்சநேயர் கோவிலில் ஸ்ரீ அனுமன் ஜெயந்தி உற்சவ விழா தொடங்கியது. வருகிற 3-ந்தேதி வரை இந்த விழா நடக்கிறது. தினமும் ஒரு அலங்காரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலிக்க கோவில் நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்துள்ளனர். நேற்று சந்தனகாப்பு அலங்காரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

அப்போது சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், வெம்பக்கோட்டை பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர். கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. வருகிற 2-ந் தேதி அனுமன் ஜெயந்தி நிகழ்ச்சியின் போது 1,008 வடை மாலை அணிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Tags:    

Similar News