வழிபாடு
சிவன் கோவிலில் அஷ்டமி சப்பர ஊர்வலம்

சிவன் கோவிலில் அஷ்டமி சப்பர ஊர்வலம்

Published On 2021-12-28 07:20 GMT   |   Update On 2021-12-28 07:20 GMT
மேலூரில் பழமை வாய்ந்த சிவன் கோவிலில் மார்கழி மாதத்தை முன்னிட்டு அஷ்டமி சப்பர ஊர்வலம் நடந்தது. வரும் வழியில் அபிஷேகம், ஆராதனைகள் செய்யப்பட்டு ஏராளமான பொதுமக்கள் வழிபட்டனர்.
மேலூரில் பழமை வாய்ந்த சிவன் கோவில் உள்ளது. இங்கு மார்கழி மாதத்தை முன்னிட்டு அஷ்டமி சப்பர ஊர்வலம் நடந்தது. அப்போது விநாயகர், வள்ளி தெய்வானையுடன் முருகன், சண்டிகேஸ்வரர் மற்றும் ரிஷப வாகனத்தில் சிவபெருமான் காமாட்சி தாயாருடன் பவனி வந்தனர்.

மேலூர் சிவன் கோவிலில் தொடங்கி தபால் நிலையம், பேங்க் ரோடு, அழகர்கோவில் சாலை உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சாமி வீதி உலா வந்தது. வரும் வழியில் அபிஷேகம், ஆராதனைகள் செய்யப்பட்டு ஏராளமான பொதுமக்கள் வழிபட்டனர். மேலும் அனைத்து ஜீவராசிகளுக்கும் சிவபெருமானே நேரில் படியளந்ததை விளக்கும் விதமாக வழி நெடுகிலும் பெண்கள் அரிசி மாவை தூவி சென்றனர்.

இதன் மூலம் எறும்புகள் உள்ளிட்ட ஜீவராசிகளுக்கும் சிவபெருமான் படியளிப்பதை வெளிப்படுத்தும் வகையில் ஊர்வலத்தில் வந்த பெண்கள் வழி நெடுகிலும் பச்சை அரிசி மாவை தூவி வழிபட்டனர்.
Tags:    

Similar News