வழிபாடு
மண்டல பூஜையையொட்டி ஐயப்பனுக்கு மஞ்சளால் சிறப்பு அபிஷேகம் நடந்த காட்சி.

ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை - பேட்டை துள்ளல்

Published On 2021-12-27 08:33 GMT   |   Update On 2021-12-27 08:33 GMT
ராமநாதபுரம் அருகே ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை மற்றும் பேட்டைதுள்ளல் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
ரெகுநாதபுரம் கிராமத்தில் உள்ளது வல்லபை ஐயப்பன் கோவில். இங்கு இந்த ஆண்டின் மண்டல பூஜையை முன்னிட்டு கடந்த 18-ந்தேதி கொடியேற்றம் மற்றும் காப்பு கட்டுதலுடன் திருவிழா தொடங்கியது.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று மண்டல பூஜை மற்றும் பேட்டை துள்ளல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதிகாலை 5 மணிக்கு கணபதி பூஜையுடன் தலைமை குரு மோகன் சாமி தலைமையில் தொடங்கியது. தொடர்ந்து கோவிலில் இருந்து ஏராளமான ஐயப்ப பக்தர்கள் உடல் முழுவதும் பல்வேறு வண்ணங்களில் சாயங்களை பூசி ஆடியபடி சரணம் ஐயப்பா முழக்கத்துடன் கோவிலில் இருந்து ஊர்வலமாக கோவில் அருகே உள்ள பஸ்ம குளத்திற்கு வந்தனர்.

தொடர்ந்து அங்கு ஐயப்பன் சிலைக்கு பால், விபூதி, சந்தனம், மஞ்சள், தேன் உள்ளிட்ட பல வகை பொருட் களால் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு ஆராட்டு விழாவும் நடைபெற்று சிறப்பு தீபாராதனை பூஜைகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து கோவிலில் நடைபெற்ற அன்னதானத்தில் ஏராள மான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

பின்னர் மாலை 4 மணி அளவில் சாமி எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. திருவிழாவில் கடைசி நாள் நிகழ்ச்சியாக வருகிற 31-ந் தேதி இருமுடி கட்டுதலும் சிறப்பு அபிஷேகமும் நடைபெறுகிறது. அன்று இரவு 12 மணிக்கு புத்தாண்டு சிறப்பு பூஜைகள் முடிந்த பின்னர் பக்தர்கள் அனைவரும் சபரிமலை யாத்திரை புறப்பாடு நடைபெறுகிறது.

இதற்கான ஏற்பாடுகளை வல்லபை ஐயப்பன் சேவை நிலைய அறக்கட்டளை தலைவர் மோகன் தலைமையில் நிர்வாகிகள் அனைவரும் ஒருங்கிணைத்து செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News