வழிபாடு
காட்டூர் அய்யப்பன் பஜனை சமாஜத்தில் சண்டி ஹோமம் நடைபெற்ற போது எடுத்தபடம்.

மேட்டுப்பாளையத்தில் ஐயப்பன் பஜனை சமாஜ ஆண்டுவிழா

Published On 2021-12-22 06:23 GMT   |   Update On 2021-12-22 06:23 GMT
மேட்டுப்பாளையத்தில் ஐயப்பன் பஜனை சமாஜ 61-வது ஆண்டுவிழாவை முன்னிட்டு சண்டி ஹோமம் நடைபெற்றது. சுவாமி அய்யப்பனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெற்றது.
மேட்டுப்பாளையம் காட்டூர் எஸ்.கே.சாமி லே-அவுட்டில் அய்யப்பன் பஜனை சமாஜம் உள்ளது. சமாஜத்தின் 61-வது ஆண்டு பூஜை நிகழ்ச்சிகள் கடந்த 17-ம் தேதி மகா கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. ஹோமங்கள் நடைபெற்றன.

5-வது நாளான நேற்று உலக நன்மைக்காகவும் அமைதிக்காகவும் சண்டி ஹோமம் நடைபெற்றது. யாக குண்டத்தின் முன்பு துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய திருவுருவப்படங்கள் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. சுவாமி அய்யப்பனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து யாக குண்டத்தில் வஸ்திரங்கள், மூலிகை மற்றும் வாசனை பொருள்களால் வேள்வி பூஜையும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. மேட்டூர் சந்தானம் சாஸ்திரிகள் சிறப்பு பூஜைகளை செய்திருந்தார். நிகழ்ச்சியில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். அன்னதானம் வழங்கப்பட்டது.
Tags:    

Similar News