வழிபாடு
வீரகனூர் கங்கா சவுந்தரேஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு

வீரகனூர் கங்கா சவுந்தரேஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு

Published On 2021-12-03 07:34 GMT   |   Update On 2021-12-03 07:34 GMT
தலைவாசல் கங்கா சவுந்தரேஸ்வரர் கோவிலில் சாமிக்கு பால், பன்னீர், இளநீர், தேன், சந்தனம், தயிர் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
தலைவாசல் அருகே வீரகனூர் சுவேத நதிக்கரையில் கங்கா சவுந்தரேஸ்வரர் கோவிலில் நேற்று பிரதோஷத்தையொட்டி, சாமிக்கு பால், பன்னீர், இளநீர், தேன், சந்தனம், தயிர் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. திருவாசகம் பாடி பக்தர்கள் வழிபாடு செய்தனர். சாமிக்கு பல்வேறு மலர்களால் அலங்கரித்து நெய்தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர்.

வீரகனூர் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பக்தர்கள் திரண்டு வந்து சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் ஆறகளூர் காமநாத ஈஸ்வரர் கோவில், தலைவாசல் கைலாசநாதர் கோவில், நாவக்குறிச்சி வைத்தீஸ்வரன் கோவில், சிறுவாச்சூர் ஏகாம்பரேஸ்வரர் கோவில், தேவியாக்குறிச்சி சிதம்பரேஸ்வரர் கோவில், வெள்ளையூர் சிவன் கோவில் ஆகிய கோவில்களில் சிறப்பு பூஜை, வழிபாடு நடைபெற்றது.
Tags:    

Similar News