வழிபாடு
உத்தாணிமுத்து முனியாண்டவர் கோவில் குடமுழுக்கு

உத்தாணிமுத்து முனியாண்டவர் கோவில் குடமுழுக்கு: திரளான பக்தர்கள் பங்கேற்பு

Published On 2021-12-03 07:12 GMT   |   Update On 2021-12-03 07:12 GMT
பாபநாசம் அருகே உள்ள உத்தாணி கிராமத்தில் முத்து முனியாண்டர் கோவில் உள்ளது. இக்கோவிலில் குடமுழுக்கு விழா நேற்று நடைபெற்றது.
பாபநாசம் அருகே உள்ள உத்தாணி கிராமத்தில் முத்து முனியாண்டர் கோவில் உள்ளது. இக்கோவிலில் குடமுழுக்கு விழா நேற்று நடைபெற்றது. விழாவையொட்டி கடந்த 29-ந்தேதி சந்தோஷ்குமார் சிவாச்சாரியார் தலைமையில் கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், வாஸ்து சாந்தி ஆகியவை நடைபெற்றது.

30-ந்தேதி முதல்கால யாக பூஜைகள் தொடங்கியது. நேற்று 4-ம் கால யாக சாலை நடைபெற்றது. தொடர்ந்து கடங்கள் புறப்பாடு நடைபெற்று, முத்துமுனியாண்டர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு குடமுழுக்கு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து 48 நாட்களுக்கு மண்டலாபிஷேக பூஜைகள் நடைபெறுகிறது.
Tags:    

Similar News