ஆன்மிகம்
புள்ளம்பாடியில் மாரியம்மன் கோவில் திருவிழா

புள்ளம்பாடியில் மாரியம்மன் கோவில் திருவிழா

Published On 2021-11-30 08:50 GMT   |   Update On 2021-11-30 08:50 GMT
100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் அலகு குத்தி அக்னிசட்டி, பூங்கரகம், பிள்ளை தொட்டி, பால்குடம் ஏந்தி ஊர்வலமாக கிராமத்தின் வடக்கு பகுதியில் உள்ள குழுந்தாளம்மன் கோவிலுக்கு வந்தனர்.
புள்ளம்பாடியில் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழா காப்புகட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. நேற்று முன்தினம் மாவிளக்கு பூஜை நடைபெற்றது. நேற்று அக்னி சட்டி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

முன்னதாக பெரிய ஏரி கரையில் இருந்து 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் அலகு குத்தி அக்னிசட்டி, பூங்கரகம், பிள்ளை தொட்டி, பால்குடம் ஏந்தி ஊர்வலமாக கிராமத்தின் வடக்கு பகுதியில் உள்ள குழுந்தாளம்மன் கோவிலுக்கு வந்தனர். பின்னர் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 7 மணி அளவில் காப்பு கட்டுதல் அறுத்து விழாவை நிறைவு செய்கின்றனர்.
Tags:    

Similar News