ஆன்மிகம்
விநாயகர்

தஞ்சை வலம்புரி பாலச்சந்திர விநாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடு

Published On 2021-10-27 03:52 GMT   |   Update On 2021-10-27 03:52 GMT
தஞ்சை வலம்புரி பாலச்சந்திர விநாயகர் கோவிலில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகே புதிய வீட்டு வசதி குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள வலம்புரி பாலச்சந்திர விநாயகர் கோவிலில் சங்கடகர சதுர்த்தியையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.

இதையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

பின்னர் சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News