ஆன்மிகம்
திருச்செங்கோட்டுக்கு கொண்டு வரப்பட்ட தன்வந்திரி கருடாழ்வார் உற்சவர் சிலைக்கு பூஜை

திருச்செங்கோட்டுக்கு கொண்டு வரப்பட்ட தன்வந்திரி கருடாழ்வார் உற்சவர் சிலைக்கு பூஜை

Published On 2021-10-22 09:36 GMT   |   Update On 2021-10-22 09:36 GMT
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு செல்வ விநாயகர் கோவில் பகுதியில் தன்வந்திரி கருடாழ்வார் உற்சவர் சிலை பொதுமக்கள் வழிபாட்டுக்காக வைக்கப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை பகுதியில் தன்வந்திரி தியான பீடம் உள்ளது. இங்கு கருடாழ்வாருக்கு 16.8 அடி உயரத்தில் சிலை அமைக்கப்பட உள்ளது. இதன் உற்சவர் சிலை 6 மாநிலங்களில் உள்ள 600 வீடுகள் மற்றும் பல்வேறு இடங்களுக்கு எடுத்து சென்று பூஜைகள் செய்யப்பட்டு பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்படுகிறது.

இதன் ஒரு பகுதியாக நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு செல்வ விநாயகர் கோவில் பகுதியில் தன்வந்திரி கருடாழ்வார் உற்சவர் சிலை பொதுமக்கள் வழிபாட்டுக்காக வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தன்வந்திரி தியான பீடத்தின் நிறுவனர் முரளி கூறுகையில், கொரோனா போன்ற பல்வேறு நோய்களில் இருந்து பொதுமக்களை காக்கும் வகையில் தன்வந்திரி கருடாழ்வார் உற்சவ சிலையை பொதுமக்கள் வழிபாடுக்காக வைக்கப்படுகிறது.

கோவை, திருப்பூர், தர்மபுரி, நாமக்கல் உள்ளிட்ட இடங்களில் இந்த சிலையை கொண்டு சென்று தற்போது திருச்செங்கோடு வந்துள்ளோம் என்றார். கருட தன்வந்திரி கருடாழ்வார் சிலையை சுற்றுப்புற பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள பூஜை செய்து தரிசித்து சென்றனர்.
Tags:    

Similar News