ஆன்மிகம்
திருப்பதி

திருப்பதியில் ரூ.3 கோடியை தாண்டி உண்டியல் வசூல்

Published On 2021-10-22 08:24 GMT   |   Update On 2021-10-22 08:24 GMT
நவம்பர், டிசம்பர் மாதத்திற்கான ரூ.300 கட்டண தரிசன டிக்கெட் இன்று வெளியிடப்பட்டது. ஆன்லைனில் டிக்கெட் வெளியிடப்பட்ட சிறிது நேரத்தில் பக்தர்கள் ஆர்வமுடன் முன்பதிவு செய்தனர்.
திருப்பதி :

திருப்பதியில் கொரோனா ஊரடங்கு காலத்தில் உண்டியல் வருவாய் லட்சக்கணக்கில் இருந்தது. ஊரடங்கு தளர்வுக்கு பின்னர் பக்தர்கள் வருகை அதிகரித்தது. இதனால் உண்டியல் வருவாயும் கணிசமாக உயர்ந்து வந்தது. கோடியை தொட்ட உண்டியல் வருவாய் படிப்படியாக ரூ.2 கோடி அளவுக்கு உயர்ந்தது.

இந்த நிலையில் தற்போது பக்தர்கள் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளது. தினமும் 30 ஆயிரம் பக்தர்கள் வரை தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

இதனால் ரூ.2 கோடி அளவிற்கு வந்த உண்டியல் வருவாய் கடந்த ஒரு வாரத்தில் 3 நாட்கள் ரூ.3. கோடியை தாண்டி வசூலாகியுள்ளது.

18-ந்தேதி ரூ.3.1 கோடி, 19-ந்தேதி ரூ.3.23 கோடி, 20-ந்தேதி ரூ.2.57 கோடி, நேற்று (21-ந்தேதி) ரூ.3.18 கோடி உண்டியல் வசூலாகியுள்ளது.

கொரோனா ஊரடங்கிற்கு பிறகு உண்டியல் வருவாய் தொடர்ந்து ரூ.3 கோடியை தாண்டி வசூலாகியுள்ளது. தேவஸ்தான அதிகாரிகளிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து பக்தர்கள் எண்ணிக்கை அதிகமாக தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருவதால் உண்டியல் வசூல் கொரோனா ஊரடங்கிற்கு முன்பு சாதாரண காலத்தில் இருந்த நிலையை அடையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திருப்பதியில் நேற்று 27,473 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 13,338 பேர் முடிகாணிக்கை செலுத்தினர்.

இந்த நிலையில் நவம்பர், டிசம்பர் மாதத்திற்கான ரூ.300 கட்டண தரிசன டிக்கெட் இன்று வெளியிடப்பட்டது. ஆன்லைனில் டிக்கெட் வெளியிடப்பட்ட சிறிது நேரத்தில் பக்தர்கள் ஆர்வமுடன் முன்பதிவு செய்தனர்.

இலவச தரிசன டோக்கன் ஆன்லைனில் நாளை வெளியிடப்படுகிறது.
Tags:    

Similar News