ஆன்மிகம்
சீனிவாசமங்காபுரம் அருகே வெங்கடேஸ்வர சுவாமி கோவிலில் மகாசம்ப்ரோக்சன விழா தொடங்கியது

சீனிவாசமங்காபுரம் அருகே வெங்கடேஸ்வர சுவாமி கோவிலில் மகாசம்ப்ரோக்சன விழா தொடங்கியது

Published On 2021-10-20 07:24 GMT   |   Update On 2021-10-20 07:24 GMT
சீனிவாசமங்காபுரம் வெங்கடேஸ்வர சுவாமி கோவிலில் இன்று (புதன்கிழமை) போக சீனிவாசமூர்த்தி பிரதிஷ்டை செய்து அபிஷேகம் மற்றும் ஸ்நாபன திருமஞ்சனம் செய்யப்படுகிறது.
சீனிவாசமங்காபுரம் அருகே உள்ள ஸ்ரீவாரிமெட்டு வெங்கடேஸ்வர சுவாமி கோவிலில் அஷ்டபந்தன மகாசம்ப்ரோக்சன நிகழ்ச்சி நேற்று தொடங்கியது. அதன் ஒரு பகுதியாக யாகசாலையில் பூஜைகள் நடந்தன.

இன்று (புதன்கிழமை) போக சீனிவாசமூர்த்தி பிரதிஷ்டை செய்து அபிஷேகம் மற்றும் ஸ்நாபன திருமஞ்சனம் செய்யப்படுகிறது. மாலையில் சிறப்பு ஹோமங்கள் மற்றும் அஷ்டபந்தனம் செய்யப்படுகின்றன. காலை 11 மணிக்கு மகாசம்ப்ரோக்சனம் நடக்கிறது.

நேற்று நடந்த நிகழ்ச்சியில் கோவில் உதவி நிர்வாக அலுவலர் தனஞ்சயுடு, கண்காணிப்பாளர் ரமணய்யா மற்றும் கோவில் அர்ச்சகர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News