ஆன்மிகம்
தஞ்சை பெரியகோவிலில் சுற்றுலா பயணிகள் வருகை புரிந்ததை படத்தில் காணலாம்.

தஞ்சை பெரியகோவில், வேளாங்கண்ணியில் பக்தர்கள் குவிந்தனர்

Published On 2021-10-15 07:56 GMT   |   Update On 2021-10-15 07:56 GMT
வேளாங்கண்ணி பேராலயத்தில் பக்தர்கள் பங்களிப்போடு வழக்கமான சிறப்பு பிரார்த்தனை நடைபெற்று வருகிறது. அனைத்து வழிபாட்டு தலங்களிலும் காலை முதலே பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர்.
தமிழக அரசு அனுமதி அளித்ததையடுத்து தஞ்சை பெரியகோவில், நாகை மாவட்டம் வேளாங்கண்ணி பேராலயம், நாகூர் தர்கா, எட்டுக்குடி முருகன், சிக்கல் சிங்காரவேலர் கோவில், நீலாயதாட்சி அம்மன் கோவில் என அனைத்து வழிபாட்டு தலங்களும் திறக்கப்பட்டன.

வேளாங்கண்ணி பேராலயத்தில் பக்தர்கள் பங்களிப்போடு வழக்கமான சிறப்பு பிரார்த்தனை நடைபெற்று வருகிறது. அனைத்து வழிபாட்டு தலங்களிலும் காலை முதலே பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். நாகூர் தர்கா இன்று அதிகாலை திறக்கப்பட்டு அங்கு இஸ்லாமியர்கள் மட்டுமில்லாமல் அனைத்து மதத்தினரும் வழிபட்டனர். இதேபோல் அனைத்து இந்து கோவில்களிலும் பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர்.

தஞ்சை பெரியகோவில், வேளாங்கண்ணி உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களில் விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் வரத்து குறைவு காரணத்தால் வாழ்வாதாரம் பாதித்திருந்த வியாபாரிகளும் தற்போது மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வழிபாட்டுத் தலங்கள் திறக்க அனுமதியளித்த தமிழக அரசுக்கு அனைத்து தரப்பினரும் நன்றி தெரிவித்தனர்.
Tags:    

Similar News